ஒரு பெண்மணி ஒருவர் வண்ணத்துப் பூச்சிக்கு செயற்கை ரெக்கையை கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண்மணியின் பெயர் டஹ்லியா. இவர் தனக்கு சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை வைத்துள்ளார்.
அதில்தான் நான் செய்த இந்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். வண்ணத்துப்பூச்சிக்கு நெமோ-பக்கி பயோனிக் பட்டாம்பூச்சி என்று பெயரிட்டார்.
வண்ணத்துப்பூச்சி தனது இறக்கைகளை மடக்க எப்படி போராடுகிறது என்பதை டஹ்லியா தனது வீடியோவில் காட்டியுள்ளார்.
வீடியோவில் அவர் தெரிவிக்கையில், “நாளுக்கு நாள், வண்ணத்துப்பூச்சியின் சிறகு மேலும், மேலும் உடைந்து கொண்டிருந்தது. அதனால் நான் வேகமாக அதனை சரி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டு, பின்னர் இறக்கைகளை சரி செய்வதற்காக டஹ்லியா ஒரு கைவினை கடைக்குச் சென்று வண்ணத்துப்பூச்சியின் இறக்கையின் அளவுள்ள ஒரு இறகைக் கண்டுபிடித்தார்.
வண்ணத்துப்பூச்சியின் இறக்கைக்கு கடையில் வாங்கிய இறகு பொருந்தியது. இதைத்தவிர இவர் தினமும் பட்டாம் பூச்சிக்கு தேனையும் உணவாக கொடுத்து வந்தார்.
டஹ்லியா கடையில் தான் வாங்கிய இறகை பழுது பார்த்து வண்ணத்துப் பூச்சியின் உடலில் பொறுத்தியுள்ளார். முதலில் வண்ணத்துப்பூச்சி பறக்கவில்லை.
பின்னர் மெதுமெதுவாக படிப்படியாக பறக்க ஆரம்பித்துள்ளது. ஒரு நாள் மெதுவாக மேலே உயர, உயர பறந்து செயற்கை இறக்கைகளை கொண்டு வாழத் தொடங்கி விட்டது என்று அவர் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
டஹ்லியாவின் அன்பான செயலுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.