வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பிளாட்பார்மை மேலும் யூஸர் பிரெண்ட்லியாக மாற்ற, அவ்வப்போது புதிய அம்சங்களைச் சேர்க்கும் அல்லது அப்டேட் செய்யும் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் ஏதேனும் ஒரு அம்சத்தை நீக்கியதாக கேள்விப்பட்டு உள்ளீர்களா? நினைவூட்டும் வண்ணம் சமீபத்தில் தான் இந்நிறுவனம் பீட்டா அல்லாத பயனர்களுக்கு அதன் மல்டி டிவைஸ் ஆதரவை கிடைக்கச் செய்தது. அதனை தொடர்ந்து ஒரு அம்சத்தை நீக்கியுள்ளது.
ஆம்! WABetaInfo வழியாக கிடைத்த ஒரு அறிக்கையின்படி, இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுக செய்த ஒரு பிரபலமான அம்சத்தை நீக்கியுள்ளது.
வெளியான அறிக்கையின்படி, “ஒரு வருடத்திற்கு முன்பு வாட்ஸ்அப், மெசஞ்சர் ரூம்ஸ்-ஐ உருவாக்க ஒரு பயனுள்ள ஷார்ட்கட்டை வெளியிட்டது, இதில் 50 பங்கேற்பாளர்கள் வரை ஒரு பேஸ்புக் க்ரூப் வீடியோ காலில் சேரலாம்.
ஒரு செய்தி உள்ளது: இறுதியாக வாட்ஸ்அப் நிறுவனம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் உள்ள அதன் chat share sheet மற்றும் calls section-இல் இருந்து இந்த விருப்பத்தை நீக்குகிறது”
பேஸ்புக் நிறுவனம் இந்த அம்சத்தை இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு வந்தது, பின்னர் அதை வாட்ஸ்அப்பிலும் வெளியிடப்பட்டது. இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் வழியாக ஒரு Room-ஐ உருவாக்கவோ அல்லது Room-இல் சேரவோ முடிந்தது.
WABetaInfo-வின் அந்த அறிக்கை மேலும் கூறுகையில், “வாட்ஸ்அப் எந்தெந்த அம்சங்கள் தங்கள் பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதை சரிபார்க்கிறது.
ஒரு அம்சம் வெற்றியை அடையவில்லை என்றால், அதை மாற்ற வேண்டிய தருணம் இது என்று அர்த்தம் கொள்கிறது. இந்த வழக்கில், மேற்க்குறிப்பிட்ட விருப்பம் பயன்படுத்தப்படவில்லை என்பதை வாட்ஸ்அப் கண்டறிந்துள்ளது,
எனவே அதை நீக்குவது நல்லது என்று நினைத்திருக்கலாம், ஒருவேளை அடுத்த அப்டேட்களுக்கு ஒரு நல்ல மாற்று வரலாம். நினைவூட்டும் வண்ணம், வாட்ஸ்அப் மெசஞ்சர் ரூம்ஸ் ஷார்ட்கட் ஆனது முதன்முதலில் மே 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
மேலும் சமீபத்தில், இந்நிறுவனம் ஒரு ஸ்பெஷல் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் பயனர்கள் இப்போது iOS இலிருந்து Android-க்கு சாட்களை மாற்ற முடியும்.
இந்த சாட் மைக்ரேஷன் அம்சத்தை WhatsApp அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது வரை, இந்த அம்சம் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே அணுக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடந்த கேலக்ஸி அன்பேக் நிகழ்வின் போது வாட்ஸ்அப் நிறுவனம் இந்த சாட் மைக்ரேஷன் அம்சத்தை அறிமுகம் செய்தது. அந்த நேரத்தில் இந்த அம்சம் சாம்சங் நிறுவனத்தின் “மடிங்கக்கூடிய” ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டது.