ஆசிரியர் பணி நியமன வயது வரம்பு அதிகரிக்க திட்டம்!

teacher-3
teacher-3

ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை அதிகரிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது. ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில், அதற்கு ஓராண்டு முன் வரை நியமனம் செய்யலாம் என்ற அரசாணை பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 59 வயது வரை பணி நியமனம் மேற்கொள்ளலாம் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு நேர்மாறாக ஆசிரியர்களின் வயது வரம்பை 40 ஆக தளர்த்தி, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

அரசு பள்ளிகளில் 2,207 முதுநிலை ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வு, சமீபத்தில் அறிவிக்கப் பட்டது. அதில் தான், இந்த வயது வரம்பு அமலுக்கு வந்துள்ளது. இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இதற்காக, பல ஆண்டுகளாக படித்து பட்டங்கள் பெற்று, பயிற்சி பெற்று வந்தவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளதாக, பட்டதாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக, பட்டதாரிகள் தரப்பில், சென்னையில் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடந்தன.

இந்நிலையில், ஆசிரியர்களின் நியமன வயது வரம்பை உயர்த்துவது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தி, முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயது வரம்பு அதிகரிக்கப்பட்டால், முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories