SBI க்கு ரூ.ஒரு கோடி அபராதம்: RBI அறிவிப்பு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
rbi
rbi

பாரத ஸ்டேட் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையளித்தல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

ஆனால் இந்த வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றவில்லை என்பது வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

SBI
SBI

இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கி அளித்த பதில் எதுவும் சரியாக இல்லை என்று ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.