அழகிரிக்கு பதில் சொல்ல தேவையில்லை என சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அழகிரி என்ன கருத்து சொன்னாலும் வெளியே இருந்து சொல்லும் கருத்தாகும். அவர் ஏற்கனவே கருணாநிதியால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். இதற்கு விரிவான தகவலை நாளைய செயற்குழுவில் ஸ்டாலின் தெரிவிப்பார். அவர் கட்சியிலேயே இல்லை. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. கருணாநிதி மறைவில் இருந்தே இன்னும் நாங்கள் மீளவில்லை. கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.




