
தல அஜித் பைக் ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இவர் சமீபகாலமாகவே உலக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான்.
சமீபத்தில், இவர் வாகா எல்லையில் நம்முடைய இந்தியக் கொடியை ஏந்தி பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து, இவர் உயரமான பாறையின் விளிம்பில் நின்றபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில், தற்போது இவர் கரடுமுரடான பகுதியில் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை சுப்பராஜ் வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அஜித் ஓட்டிச் செல்லும் BMW நிறுவனத்தின் பைக் BMW R 1200 GS மாடலாகும். ஜெர்மனி தயாரிப்பான இந்த பைக் தற்போது மார்கெட்டில் ரூ.17 லட்சம் முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது.
அதில் உள்ள ஒரு சில சிறப்பம்சங்களுக்கு ஏற்ப இந்த விலையில் மாற்றம் வரும். ரூ.20 லட்சத்துக்கு பைக்கா என்று நம்மை வாயைப்பிளக்க வைத்தாலும் அதில் உள்ள அம்சங்கள் ”அவ்வளவு பணத்துக்கு இது வொர்த்துதான்” என சொல்ல வைக்கும்.
இந்த பைக்கின் பலமே எல்லா சாலைகளிலும் சீறிச்செல்லும். நல்ல ரோடோ, கரடுமுரடோ, பைக் போகும் அளவுக்கு இடம் இருந்தால் போதும், எதற்கும் அஞ்சாமல் போய்க்கொண்டே இருக்கும். அதன் தயாரிப்பும் அப்படியே செய்யப்பட்டது. 125 குதிரைத்திறன் பவர், 7750 rpm, 1170 சிசி என தாறுமாறு எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் பைக்கின் சிறப்பே பல மோட்ஸை கொண்டது. அதாவது மழை, வெயில், பள்ளம்,, மேடு என எங்கு வேண்டுமானாலும், எந்த காலத்திலும் இந்த வண்டியை நம்பி ஓட்டலாம்.
இதில் உள்ள மழைக்கான ஆப்ஷனில் இது மிகவும் ஸ்மூத்தாக பயணிக்கும். அதற்கு ஏற்ப சஸ்பென்சன், க்ரிப் போன்றவை மாறும். இதனால் மழை நேரத்திலும் எந்த பயமும் இல்லாமல் பயணம் செய்யலாம்.
நீண்ட தூரம் பயணித்தாலும் சொகுசாகவே உணரவைக்கும் வடிவமைக்கு மிக முக்கியமானது. ஹேண்டில்பார், சஸ்பென்சன் என அனைத்துமே பக்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம்,நீண்ட நேரம் என பயணம் செய்தாலும் சோர்வோ, உடல் வலியோ இருக்காது.

பெட்ரோல், ஆயில், கியர், லோ பேட்டரி என அனைத்தையுமே இந்த பைக் நமக்கு சொல்லிவிடும். எல்லா அம்சங்களுகும் வார்னிங் இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எமர்ஜென்சி நேரத்தில் பைக்கையும், ஓட்டுபவரையும் பாதுகாக்கும் வண்ணம் சில சிறப்பு தொழில்நுட்பங்களும் இதில் உள்ளன.
இதன் லுக்கே செம ஸ்டைலாக இருக்கும். ஒரு பிரம்மாண்ட பைக் ஊர்ந்து செல்லும் லுக்கை இது கொடுக்கும். இதன் சவுண்டும் பார்ப்போரை ரசிக்கவே வைக்கும்.
இந்த டிஜிட்டல் உலகுக்கு ஏற்ப பைக்கில் சில டெக்னாலஜி அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ரூட் மேப்பை பைக்கில் செல்போனுடன் இணைத்து ப்ளூடுத், ஹெல்மெட்டுடன் இணைத்துக் கொள்ளலாம். இதனால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.
#AjithKumar offroading! pic.twitter.com/Aiq20mHZ4v
— Suprej Venkat (@suprej) October 27, 2021



