
உள் மற்றும் வெளிப்புற சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுமையான திறன் பெற்றுவருகிறது என பிரதமர் மோடி ஞாயிழற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி, “நிலம், நீர், காற்று, வானம் என அனைத்து முனைகளிலும் இந்தியாவின் திறன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது.
எப்போதுமே இந்தியா திறமையாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், உணர்திறன் உடையதாகவும், எச்சரிக்கையாகவும், அடக்கமாகவும், வளர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்றே சர்தார் படேல் விரும்பினார். அவர் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தார்.
இன்று, அவரிடமிருந்து உத்வேகத்தைப் பெற்று, நாடு வெளிப்புற மற்றும் உள்புற சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக மாறி வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், தேவையில்லாத பல சட்டங்களிலிருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமைமிக்க வளமான இந்தியாவுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த வல்லபாய் படேலுக்கு இந்திய அஞ்சலி செலுத்திவருகிறது. படேல் வரலாற்றில் மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் வாழ்கிறார்” என்றார்.
A tribute to the great Sardar Patel. https://t.co/P2eUmvo61n
— Narendra Modi (@narendramodi) October 31, 2021
Today, India pays homage to Sardar Patel, whose life was devoted to furthering national progress, unity and integration. pic.twitter.com/CYOjBisBgN
— Narendra Modi (@narendramodi) October 31, 2021