- Advertisements -
Home அடடே... அப்படியா? நடப்பு கணக்கு தொடங்க விரும்புபவர்களுக்கு புதிய விதிமுறைகள்: RBI!

நடப்பு கணக்கு தொடங்க விரும்புபவர்களுக்கு புதிய விதிமுறைகள்: RBI!

- Advertisements -
rbi
rbi

இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதிதாக நடப்பு கணக்கு தொடங்க விரும்புபவர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டது.

சில வாரங்களுக்கு முன் நடப்பு கணக்கு விதிமுறைகளில் ஒரு சில மாற்றங்களை ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. ஆனால், பல்வேறு சிறு வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் அதனால் பெரிதாக பாதிக்கப்பட்டனர்

எனவே, ஐந்து கோடிக்கும் குறைவாக கடன் வாங்கியவர்களுக்கான நடப்பு கணக்குகளுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வி வங்கி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் படி புதிதாக நடப்பு கணக்கு தொடங்க விரும்புபவர்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கணக்குகளை தொடங்கலாம் என்று அறியப்படுகிறது.

- Advertisements -

இந்த விதிமுறைகள் கேஷ் கிரெடிட் மற்றும் ஓவர் டிராஃப்ட் கொண்ட கணக்குகளுக்கும் பொருந்தும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அனைத்து வங்கிகளும் ஒரு மாத காலத்திற்குள் இந்த மாற்றங்களை செயல்படுத்த வேண்டும் என்பதையும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அக்டோபர் 29, 2021 அன்று இந்த அறிக்கை ஆர்பிஐ தரப்பிலிருந்து வெளியானது. இந்திய வங்கிகளின் சங்கம் (IBA) மற்றும் பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் கருத்துகளை ஆலோசித்து, கடன் வாங்குபவர்களுக்கான நடப்பு கணக்கு, மற்றும் கேஷ் கிரெடிட் மற்றும் ஓவர் டிராஃப்ட் வடிவத்தில் கடன் வசதிகளை பெறுபவர்களுக்கும் புதிய விதிமுறைகளின்படி கணக்குகளைத் திறக்கலாம் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் ஐந்து கோடிக்கும் குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு அல்லது CC அல்லது OD வசதியை பெறும் நடப்பு கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஐந்து கோடிக்கும் மேல் கடன் வசதி பெறுபவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஆர்பிஐ இன் நடப்பு கணக்கு விதிமுறைகளை பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடப்பு கணக்கு இருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய சட்டத்தை அமல்படுத்தியது.

அதாவது தன்னுடைய வருமானத்தில் குறைந்தபட்சமாக 10 சதவிகித தொகையை கணக்கில் வைத்திருக்கும் வங்கியில் மட்டுமே ஒருவரால் நடப்பு கணக்கையும் வைத்திருக்க முடியும் என்ற கட்டாயத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

வங்கிகளால் ஏற்கனவே இந்த பிரச்சினையை தீர்க்க முடியாத நிலையில் இருந்ததால், ஐபிஏ என்ற இந்திய வங்கிகள் சங்கத்திற்கு சென்று உதவி செய்ய வேண்டி கோரிக்கை விடுத்தது. அதன் விளைவாக, நடப்பு கணக்கு பற்றிய அனைத்து விதிமுறைகளும் பரிசீலிக்கப்பட்டு தற்போது ஆர்பிஐ இன் புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில், ஒரு நபரோ அல்லது நிறுவனமோ எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். இதனால் பரிவர்த்தனைகள் பல்வேறு இடங்களில் காணப்படும், அது மட்டுமின்றி, பல்வேறு கணக்குகளில் கடன்களை பெற முடியும். இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாக முறையற்ற கடன்களை மற்றும் பணப் பரிமாற்றங்களை அகற்றுவது என்று அறியப்படுகிறது.

கடன் வழங்கும் வங்கிகள் கலெக்சன் கணக்குகளை மட்டுமே தொடங்க முடியும் என்ற விதிமுறையையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இத்தகைய வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை இரண்டு வேலை நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்.

கலெக்சன் கணக்குகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. ஆனால் இந்த கடன் வழங்காத வங்கிகளுக்கு நடப்பு கணக்குகளை திறப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் நடப்புக் கணக்குகள் பற்றிய தெளிவான கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த கண்காணிப்பு வாடிக்கையாளர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 16 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.