
பயனாளர்களுக்கு உதவும் விதமாக வாட்ஸ் ஆப் செயலியில் பல்வேறு அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
எனினும் ஒருவர் டெலிட் செய்த மெசேஜை படிக்கும் வகையில் எந்த அம்சமும் வாட்ஸ் ஆப்-ல் இல்லை. ஆனால் வாட்ஸ் ஆப்-ல் உங்களுக்கு ஒருவர் அனுப்பிவிட்டு டெலிட் செய்த மேசேஜை படிக்க ஒரு ரகசிய வழி உள்ளது. ஆம்.. WhatsRemoved+ என்ற ஆப் மூலம் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை நீங்கள் படிக்க முடியும்.
டெலிட் செய்யப்பட்ட மேசேஜ்களை எப்படி படிப்பது..?
கூகுள் ஸ்டோரில் இருந்து WhatsRemoved+ ஆப்பை முதலில் டவுன்லோடு செய்ய வேண்டும்.
ஆப்பை டவுன்லோடு செய்த பிறகு, அது கேட்கும் Permission அனுமதிகளை Access செய்ய வேண்டும்.
Permission கொடுத்த பிறகு, மீண்டும் அந்த ஆப்பை கிளிக் செய்தால், ஆப்கள், மெசேஜை save அல்லது check messeges என்ற ஆப்ஷன் வரும்.
அதில் உள்ள ஆப்களின் பட்டியலில் wahtsapp-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு allow என்ற பட்டனை கிளிக் செய்து yes, save files என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது அந்த செயலியின் செட்டிங்ஸ் நடைமுறைகள் முடிந்துவிட்டது. தற்போது அதனை பயன்படுத்தலாம்.

இதன்பிறகு வாட்ஸ் ஆப்-ல் வரும் அனைத்து நோட்டிபிகேஷனுடன், டெலிட் செய்யப்பட்ட மேசேஜ்களும் சேமிக்கப்படும்.
நீங்கள் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்க்க வேண்டும் என்று விரும்பினால், WhatsRemoved+ ஆப்-ஐ கிளிக் செய்து மேலே உள்ள பாரில் வாட்ஸ் ஆப் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
கூகுளில் பிளே ஸ்டோரில் உள்ள இந்த WhatsRemoved+ ஆப்பை, 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இந்த ஆப்பின் மூலம் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை படிக்க முடியும் என்றாலும் இதில் மற்றொரு ஆபத்தும் உள்ளது.
அதாவது உங்கள் போனிற்கு வரும் OTP அல்லது வங்கிக் கணக்கு உள்ளிட்ட தகவல்களை இந்த ஆப் சேமிக்கும். எனவே உங்கள் தரவுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது.
எனவே இதுபோன்ற சூழலில் வெறும் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை படிக்க மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.. மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.