எதிர்க்கட்சிகள் பல நேரம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஒரு பும் பும் மாட்டுக்காரர் அதன் தலையில் போன் பே அட்டையை ஒட்டி அதன் மூலம் யாசகம் பெறும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் புரட்சி என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி பாஜக ஆட்சி அமைத்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் டிஜிட்டல் வசதியை ஏற்படுத்துவது, அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அரசு நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் பண பரிவர்த்தனை, வர்த்தகம் வணிகம் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயமாக்குவது போன்ற உன்னத நோக்கத்துடன் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.
குறிப்பாக சர்வதேச அளவிலான செல்போன் இணைப்பு, பொதுமக்கள் இணையதளத்தை பயன்படுத்தும் திட்டங்கள், அரசு நிர்வாகத்தை தொழில்நுட்பமாக மாற்றுவது, அனைவருக்குமான தகவல் சேவைகள், மின்னணு உற்பத்தியை அதிகரிப்பது, தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற எண்ணற்ற பல இலக்குகளை கொண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி வெற்றிகரமாக டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது, இப்போது அனைத்து தொழில்நுட்பத்திலும் டிஜிட்டல் இந்தியா திட்டம் பரவி விரவிக் கிடக்கிறது. ஆனால் பல நேரங்களில் எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக வசித்து வருவதும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு பும் பும் மாட்டின் நெற்றியில் போன்-பே அட்டை ஒன்றை ஒட்டி அதன்மூலம் அந்த மாட்டின் உரிமையாளர் பொது மக்களிடம் யாசகம் கேட்கும் வீடியோ உள்ளது.
இதுகுறித்து மேலும் கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்த டிஜிட்டல் பேமெண்ட் இன் புரட்சி கங்கிரெட்டுலுவாலு எருதை அலங்கார படுத்தி, வீடுதோறும் சென்று நாதஸ்வரம் வாசித்து யாசகம் பெறுவர், விளைநிலங்களில் பயன்படுத்த தகுதியற்ற எருத்துகள் இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.
இது ஆந்திரா தெலுங்கானாவில் பயன்பாட்டில் உள்ளது. அப்படி ஒரு நபர் கியூ ஆர் கோட் கொண்ட அட்டை மூலம் யாசகம் பெறுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது மோடி ஆரம்பித்த டிஜிட்டல் இந்தியா திட்டம் தற்போது கடைக்கோடி சாமானியனுக்கும் எட்டியுள்ளது என்பதையே இவ்வாறு கூறியுள்ளார்.
குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கட்சிகள் அது எதற்கும் உதவாத திட்டம் என்றும் அது மக்களை கவர்வதற்கான வெறும் வெற்று அறிவிப்பு திட்டம் என்றும் விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் துவங்கிய டிஜிட்டல் இந்தியா திட்டம் எந்த அளவிற்கு படிக்காத பாமர மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையே நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ உணர்த்துகிறது.
மேலும் அவர் இது டிஜிட்டல் புரட்சியின் அடையாளம் என்று தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் செல்போன் என்பது மிகவும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு உபகரணமாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் வளர்ச்சி காரணமாக இன்று செல்போன் இல்லாத நபர்களே இல்லை என்ற நிலைமை உருவாகி இருக்கிறது. கால ஓட்டம், மக்களின் தேவை உணர்ந்து கொண்டுவரப்படும் திட்டங்கள் ஒரு போதும் புறக்கணிக்கப்படுவது இல்லை.
காலப்போக்கில் அது மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து விடும் விஷயமாகி விடுகிறது. அப்படித்தான் டிஜிட்டல் இந்தியா திட்டமும் என்று சொன்னால் மிகையாகாது.
பணக்காரர் முதல் எளியோர் வரை அனைவரிடத்திலும் வியாபித்து இருக்கிறது டிஜிட்டல் இந்தியா என்பதற்கு இந்த வீடியோவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
2015 ஜூலை 1ஆம் தேதி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிவித்த பிரதமர் இந்தியாவை டிஜிட்டல் ஆற்றல்மிக்க தேசமாகவும், இந்திய சமூகத்தை அறிவுசார் சமூகமாக உருவாக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்படுகிறது என அறிவித்தார்.
தற்போது அந்த இலக்கு வெற்றி அடைந்து இருக்கிறது என்பதை தான் இது வீடியோ காட்டுகிறது. அப்போது மேலும் பேசிய பிரதமர், ஏழைகளுக்குமான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவது தனிப்பெரும் நோக்கம் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது அது பாமரனுக்கும் உகந்த டிஜிட்டல் இந்தியாவாக மாறியுள்ளது. அதாவது பணமதிப்பிழப்பு அறிவிப்பின் போது நாட்டில் மக்கள் மத்தியில் பணத்தட்டுப்பாடு அதிகரித்தது.
அப்போது டிஜிட்டல் பேமெண்ட், ஆன்லைன் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டது. படித்த இணைய வசதி தெரிந்த நபர்கள் மட்டுமே அதில் பயன் அடைந்த நிலையில், காலப்போக்கில் சாமானியர்களும் கூகுள்பே, போன் பே, ஆன்லைன் பேங்கிங் செயலிகள் என பயன்படுத்துவது பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது.
டிஜிட்டல் இந்தியாவுக்கு கிடைந்த வெற்றி எனலாம். ஒரு பானை சோற்றுக்க ஒரு சோறு பதம் என்பது போல சமூகத்தில் டிஜிட்டல் இந்தியா ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கு இந்த ஒரு வீடியோவே சிறந்த உதாரணம் எனலாம்.
Recd a video of a Gangireddulata, where alms are given thru a QR code! India’s #digitalpayment revolution, reaching folk artists. In AP + Telangana, Gangireddulavallu dress up old oxen no longer helpful on farms, walk door to door during fests, performing with their nadaswarams pic.twitter.com/8rgAsRBP5v
— Nirmala Sitharaman (@nsitharaman) November 4, 2021