ரயிலில் எழுப்பப் படும் விதவிதமான ஹாரன் சத்தம்! அதன் அர்த்தம் என்ன தெரியுமா?!

Published:

central-railway-1
central-railway-1

ரயிலின் விதவிதமான ஹாரன் சத்தம்! இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ரயில்கள் ஏற்படுத்தும் ஹாரன் ஒலியை நீங்கள் பல முறை கேட்டிருப்பீர்கள். அதை நீங்கள் நன்றாக கவனித்தும் இருப்பீர்கள். ஹாரன் சத்தம் சில வேளை நீண்டதாக இருக்கும். சில நேரங்களில் குறுகியதாக இருக்கும். சில வேளை இரண்டு முறை குறுகியதாகவோ அல்லது இரண்டு முறை நீண்டதாகவோ இருக்கும்.

இப்படி ரயில்களின் டிரைவர்கள் பல விதமாக எழுப்பும் ஹாரன் ஓசைக்குப் பின்னால் பல விதமான தகவல்கள் உள்ளன. அது என்ன என்பதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்…

ரயில், ஒரே ஒரு ஹாரன் சத்தம் எழுப்பியபடி நகர்ந்தால் அதனை சுத்தம் செய்ய ரயில்வே யார்டுக்கு எடுத்து செல்கின்றனர் என்று பொருள்.

இரண்டு முறை குறுகிய சத்தம் எழுப்பினால் ரயில் ஓட்டுநர் ரயில் கார்டிடம் சிக்னல் கேட்கிறார் என்று பொருள்.

மூன்றாவது முறை குறுகிய சத்தத்தை எழுப்பினால் ரயில் கட்டுப்பாட்டை இழந்து விட்டது என்று பொருள். அந்த நேரத்தில் ரயில்வே கார்ட் உடனடியாக வேக்குவம் பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்துவார்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நான்கு முறை குறுகிய ஹாரன் சத்தம் கேட்டால் ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது, எனவே தொடர்ந்து அதை இயக்க முடியாது என்று பொருள்…

ஒரு நீண்ட மற்றும் குறுகிய ஹாரன் சத்தம் கேட்டால் ஓட்டுநர் ரயில்வே கார்டிடம் பிரேக்கை சரி செய்யச் சொல்கிறார் என்று பொருள்.

இரு நீண்ட மற்றும் இரு குறுகிய ஹாரன் சத்தம் எழுப்பப்பட்டால் ஓட்டுநர் இன்ஜினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருகிறார் என்பதை அவருடைய கார்டுக்கு தெரிவிக்கிறார் என்று பொருள்.

மிக நீளமான ஹாரன் சத்தமானது எதிர் வரும் ஸ்டேஷனில் ரயில் நிற்காது என்பதை பயணிகளுக்கு உணர்த்துகிறது.

இரு இடை நிறுத்தத்துடன் விடப்படும் ஹாரன் சத்தம், ரயில் குறிப்பிட்ட ரயில்வே கிராசிங்கை கடக்கப்போகிறது, ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல நினைக்கும் பயணிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பதற்காகவும் எழுப்பப்படுகிறது என்று அர்த்தம்.

இரு நீண்ட மற்றும் இரு குறுகிய ஹாரன் சத்தமானது ரயில் ட்ராக் மாறப் போகிறது என்று அர்த்தம்.

இரு குறுகிய மற்றும் ஒரு நீண்ட ஹாரன் சத்தம் எழுப்பப்பட்டால் யாரோ பிரேக் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டார்கள் என்பதை இஞ்சி டிரைவர் அறிவிக்கிறார் என்று பொருள்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

6 முறை குறுகிய ஹாரன் சத்தம் எழுப்பப்பட்டால் ரயில் அபாயக் கட்டத்தில் இருக்கிறது என்பதை தெரிவிக்கும்.

Related articles

Recent articles

spot_img