பூமியின் ஒரு பெரும் பகுதி பச்சை நிற தீப்பிழம்பால் சூழப்பட்டது போன்ற ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. சூரியனின் வித்தியாசமான நடத்தையினால் இந்த அரோரா ஒலிகள் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக, சூரியன் சற்றே வித்தியாசமாக நடந்துகொள்வதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியில் அயனைஸ்ட் துகள்களின் தீவிரம் அதிகமாக உள்ளது என்றும், வழக்கத்தை விட அதிகளவில் இந்த துகள்கள் வெளியேற்றுகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இது நமது கிரகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய ராட்சத அரோரா நிகழ்வை உருவாகியுள்ளது. இந்த மிக சமீபத்திய காஸ்மிக் நிகழ்வு சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களால் கைப்பற்றப்பட்டது.
ISS இன் தாமஸ் பெஸ்கெட், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது கடைசி சில நாட்களைக் கணக்கிடுகையில், வட அமெரிக்கா மற்றும் கனடாவின் மேற்பரப்பிற்கு மேலே உள்ள பரந்த இடங்களில் இந்த ராட்சத அரோராக்களை கண்டுள்ளார்.
இது அழகான ஒளிரும் பச்சை விளக்கு போலக் காட்சி அளித்தது என்று அவர் கூறியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, இந்த நிகழ்வை அவர் படம்பிடித்து, பூமியில் உள்ள மனிதர்களுடன் பகிர்ந்துள்ளார்.
ISS விண்வெளி வீரரான பெஸ்கெட், இந்த படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவில், “வட அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் முழு பணியின் வலிமையான அரோராக்களை நாங்கள் நேரடியாகக் கண்காணித்தோம், நமது பூமியின் சுற்றுப்பாதையை விட அற்புதமான கூர்முனைகளை நாங்கள் கண்டறிந்தோம்.
மேலும், நாங்கள் அரோரா வளையத்தின் மையத்திற்கு மேலே பறந்து சென்றோம், அரோராவின் வேகமான அலைகள் மற்றும் துடிப்புகள் அனைத்தும் வளையத்தின் மையத்தில் இருந்து நேரடியாகக் கண்டு மகிழ்ந்தோம்” என்று அவர் கூறியுள்ளார்.
பூமி கிரகம் முழுவதுமாக பச்சை தீப்பிழம்புகளால் சூழப்பட்டு, அரோராவின் முடிவில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறத்துடன் கண்கவர் பிம்பத்தை இயற்கை உருவாக்கிய நிகழ்வைப் படம் பிடித்துள்ளனர்.
சரி, இப்போது எதனால் இந்த ராட்சத அரோரா நிகழ்வு நிகழ்ந்தது என்று பார்க்கலாம். சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு வெடிப்புகள் பூமியின் காந்தப்புலங்களைத் தாக்கும் போது இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இதை சதர்ன் லைட் மற்றும் நார்த்தன் லைட் என்று அழைக்கின்றனர்.
பனிக்காலத்தில் இந்த அரோராஸ் விளக்கு வானத்தில் தோன்றும். நாசாவின் கூற்றுப்படி, சூரியன் தொடர்ந்து சூரியக் காற்றை உருவாக்குகிறது, இது சூரியக் குடும்பத்தில் பாயும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களால் ஆனது. சூரியக் காற்று, பூமியின் காந்தப்புலத்திற்குள் வரும்போது, காந்த மறு இணைப்பை ஏற்படுத்துகிறது.
இது ஒரு வெடிக்கும் செயல்முறையானது. விண்வெளியில் இருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை வளிமண்டலத்தில் துரிதப்படுத்த அனுமதிக்கிறது. இதனால், ஒளிரும் அரோரா விளக்குகள் பூமியின் வானத்தில் உருவாகிறது.
நாசா மேலும் கூறுகையில், “ஒளிரும் அரோராவைப் பார்க்கும்போது, ஒரு பில்லியன் துகள்களின் மோதல்களை நாம் பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுவும், இவை பூமியின் காந்தப்புலக் கோடுகளைத் தாக்கும் போது, வண்ண நிறங்களில் தீப்பிழம்பு போல் ஒளிரச் செய்கிறது.” என்று நாசா கூறியுள்ளது.
இந்த அற்புதமான நிகழ்வை இந்தியர்கள் நேரில் காண வாய்ப்பில்லை என்பதனால், இப்போது இந்த புகைப்படத்தில் பார்த்துக்கொள்ளலாம். விண்வெளி இன்னும் ஏராளமான பல சுவாரசியமான தகவலை வெளிப்படுத்தக் காத்திருக்கிறது.
We were treated to the strongest auroras of the entire mission, over north America and Canada. Amazing spikes higher than our orbit🤩, and we flew right above the centre of the ring, rapid waves and pulses all over. #MissionAlpha https://t.co/5rdb08ljhx pic.twitter.com/0liCkGvRCh
— Thomas Pesquet (@Thom_astro) November 6, 2021