சமீப காலங்களில் பல வித விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு சிறுவனையும் ஒரு கோழியையும் காண முடிகின்றது. இந்த வீடியோவில் நடக்கும் ஒரு விஷயம் காண்பவர்களை இடைவிடாமல் சிரிக்க வைக்கின்றது
இந்த வேடிக்கையான வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நெட்டிசன்கள் இதை லைக் செய்துள்ளனர்.
சில வினாடிகளுக்கான இந்த வீடியோவில், ஒரு கோழி திறந்த வெளியில் அங்கும் இங்கும் ஒய்யாரமாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது. ஒரு சிறுவன் அந்த கோழியை தொந்தரவு செய்ய அங்கு வருகிறான். ஆனால் சில கணங்களுக்குப் பிறகு, வீடியோவில் நாம் காணும் விஷயம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
சிறுவனால் துன்புறுத்தப்பட்ட உடனேயே கோழியும் பதிலடி கொடுத்தது. அந்த சிறுவனை கடிக்க அது அவன் பின்னால் ஓடுகிறது. தன்னை துரத்தும் கோழியைக் கண்டு, அந்த சிறுவன் அலறியடித்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்குகிறான். ஆனால் அப்போதும் கோழி அவனைத் துரத்துவதை நிறுத்தவில்லை. விடாமல் அந்த சிறுவனை கோழி படுத்தி எடுத்தது.
இந்த வீடியோவை hepgul5 என்ற பயனர் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வேடிக்கையான வீடியோவுக்கு (Viral Video) நெட்டிசன்களும் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.