spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?அம்மாடி.. ஜிப்பை துரத்தும் யானை!

அம்மாடி.. ஜிப்பை துரத்தும் யானை!

- Advertisement -
elephant
elephant

காடுகளுக்குள் கேமராவை எடுத்துக்கொண்டு செல்லும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். சில போட்டோகிராபர்கள் காடுகளுக்குள்ளே தங்கி சில அரிய புகைப்படங்கள் எடுப்பதை கண்டிருப்போம்.

ஆனால் அவர்கள் அங்கு விலங்குகளோடு விலங்காக தங்கி அதற்கு எந்த வித தொந்தரவும் ஏற்படாத வகையில் சென்று வருவார்கள். ஆனால் சில சுற்றுலா பயணிகள் ஜீப்பில் வாகனங்களை தொடர்ந்து செல்வது, உணவு தருவது, அவற்றிடம் ஒலி எழுப்புவது போன்ற வேலைகள் செய்வது நம் ஊர்களில் வழக்கம்.

அப்போது கோபப்பட்டு சில விலங்குகள் எதிர்வினை ஆற்றும் பல வீடியோக்களை கண்டுள்ளோம். அது போன்று ஒரு யானையை பின்தொடர்ந்து சென்ற ஜீப்பை துரத்திய யானை வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.

கலாம் விருது வாங்கிய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் யானை ஒன்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று பேசாமல் நடந்து சென்று கொண்டு இருக்கிறது. அதனை மெதுவாக ஜீப் பின்தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது.

திடீரென கோபமடைந்த யானை வேகமாக திரும்பியது. திரும்பியதும் அலறிய சுற்றுலா பயணிகள் ஜீப்பை பின்புறமாக வேகமாக ஒட்டி கொண்டு வருகின்றனர். யானை விடாமல் துரத்திக்கொண்டு வேகமாக ஓடி வரும் காட்சியை பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது.

ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் எப்படியோ வாகனத்தை வேகமாக திருப்பி ஒட்டிக்கொண்டு வந்து தப்பிவிட்டனர். யானை பாவம் என விட்டுவிட்டு சென்றது. நொடி பொழுதில் உயிர் போகும் சம்பவத்தை தவிர்த்து பயணிகள் தப்பித்தனர்.

இந்த வீடியோவை பகிர்ந்த சுதா ராமன் எழுதியிருப்பதாவது, “ஒவ்வொரு உயிர்களின் தனிப்பட்ட இடத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், சாகசங்கள் செய்வதற்கு காடுகள் இடம் கிடையாது, இடமும் விடியோ எடுத்தவர்கள் பற்றிய தகவலும் இல்லை” என்று எழுதியிருக்கிறார்.

இதன் மூலம் விலங்குகளும் இந்த உலகில் வாழ்கின்றன, அவற்றின் நல்வாழ்வை நம் சுயநலத்திற்காக ஏற்கனவே பட்டாசு, புகை, காற்றுமாசு, தண்ணீர் மாசு போன்றவற்றால் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். நேரடியாகவும் சென்று அவர்களது இருப்பிடத்தை கெடுப்பது தவறு என்று பலர் கமெண்டில் கூறி வருகின்றனர்.

காடுகளை விலங்குகளின் நன்மைக்காகவே அரசும் வனதுறையும் பாதுகாத்து வருகின்றன. அவற்றை கெடுக்காமல் இருப்பது தான் நாட்டு மக்களாகிய நமது கடமை என்று ஒரு பயனர் கமென்டில் தெரிவித்திருந்தார்.

Let’s learn to respect the personal space of every other individual.

Forests are not the places for any adventure #ResponsibleTourism

(Location and credits not known) pic.twitter.com/4Gcfy9DDzr— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) November 18, 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe