April 26, 2025, 11:08 AM
33.1 C
Chennai

கிரிப்டோ கரன்ஸி: நிழல் உலக சாம்ராஜ்யத்துக்கு… இந்தியாவில் வருது தடை!

cryto currency
cryto currency

இந்தியாவில் க்ரிப்டோ கரன்ஸி இனி தடை செய்யப்படும் என்று பாரதப் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது இது குறித்த சட்டவரையறை தாக்கல் செய்யப்பட்டு தீர்மானம் கொண்டு வந்து சட்டம் இயற்றிட இருப்பதாக பிரதமர் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இது இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலக க்ரிப்டோ கரன்ஸி சந்தையே ஆட்டம் கண்டு இருக்கிறது என்கிறார்கள். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய ருபாய் மதிப்பில் ஒரு மணி நேரத்தில் சுமார் 68 ஆயிரம் ரூபாய் சரிந்தது. இனி வரவிருக்கும் நாட்களில் இது இன்னமும் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்திய இளம் தலைமுறையினர் எந்தக் காரணத்திற்காகவும் இதில் முதலீடு செய்ய வேண்டாம் என பிரதமர் கேட்டுக் கொண்டு இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய முதலீடுகள் மட்டும் சுமார் அறுபது மில்லியன் டாலர்களாக இருந்த சமயத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக சடுதியில் 7 முதல் 11 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்தது இந்த க்ரிப்டோ கரன்ஸி சந்தை.

உலக பங்கு வர்த்தக முதலீடுகளில் இந்திய பங்களிப்பு மாத்திரமே 34% சதவீதமாக இருக்கும் என்று அதிர்ச்சி அளிக்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்!

இது நிச்சயமாக தமிழகத்தில் மிக பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும் போல் தெரிகிறது. மறைமுகமாக திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக கூட இருக்கலாம். முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறார்கள் நம் மத்திய அரசு தரப்பில்! நிச்சயமாக பாராட்டலாம்!

தமிழகத்தில் பெருகி வரும் க்ரிப்டோ கரன்ஸி செயல்பாடுகள்…

பெருநகரங்களில் மாத்திரம் அல்லாமல்…. தமிழகத்தின் பல பகுதிகளில் புற்றீசல் போல க்ரிப்டோ கரன்ஸி பெயரில் முதலீட்டு திட்டங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு பலரும் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதனை புரிந்து கொள்ள ஆதியோடு அந்தமாக இந்த விஷயத்தை ஒரு பறவை பார்வையில் பார்த்து விடுவோம்.

க்ரிப்டோ கரன்ஸி என்பதை டிஜிட்டல் கரன்ஸி யாக பலர் புரிந்து கொண்டாலுமே கூட நிஜத்தில் இவைகளை விருச்சுவல் கரன்ஸி யாகவே மதிப்பீடு செய்கிறார்கள். இங்கு விருச்சுவல் என்பது இல்லாத ஒன்றை உருவகம் செய்து கொள்வது…. அல்லது இருப்பதாக கொள்வது.

ALSO READ:  இந்த கொல்லம் - சென்னை ரயில் நேரத்தை மாத்த மாட்டீங்களா?

VFX விஷுவல் எஃபெக்ட் எனும் திரைப்படத்தில் வரும் மாயாஜாலக் காட்சி போல….. இங்கு இந்த விருச்சுவல் என்பதின் பொருளாக நாம் கொள்ள வேண்டும். ஆனால் விருச்சுவல் கரன்ஸி எனும் இதனை கணினி தொழில்நுட்பத்தின் மூலம் வேறோர் விதமாக கட்டமைப்பு செய்து வைத்து இருக்கிறார்கள். கணினி மென்பொருள் ஊடாக உள்ளீடு செய்வதென்பது இன்றளவும் 0,1 எனும் எண்கள் மட்டுமே. அதாவது கணித மொழியில் இரும எண்கள் மாத்திரமே. இதற்கு பைனரி என்று பெயர். இந்த அலகுகளை தான் கணினி மொழியில் பிட் அண்ட் ஃபைட் என்பர்.

அதாவது கணினி நினைவகத்தில் ஃபைட் (byte)களாகவே நாம் உள்ளீடுபவை சேகரிக்கப்படுகிறது. ஒரு ஃபைட் என்பது 8 பிட் (bit) களை கொண்ட ஒரு தொகுப்பு. அதனால் தான் கணினி நினைவகம் எட்டின் பெருக்கலாகவே இருக்கிறது. 8,16,32,64…….

இன்று நாம் உபயோகிக்கும் செல்போனில் உள்ள நினைவகம் இந்த அலகில் தான் கணக்கிடப்படுகிறது. இன்றைய தேதியில் நாம் அநாயாசமாக பயன்படுத்தி வரும் வார்த்தைகள் 1gb, 2gb என்பதெல்லாம் இதனையே குறிக்கிறது. இங்கு gb என்பது ஜிகா ஃபைட். அதுபோலவே நம் செல்ஃபோனில் உள்ள நினைவகம் 32ஜிபி, 64ஜிபி, 128ஜிபி எட்டு எண்ணின் பெருக்கலில் இருப்பதை நன்கு கவனித்தால் புரிந்து கொள்ள முடியும். அவ்வளவே சமாச்சாரம்.

இப்பொழுது நம் விஷயத்திற்கு வருவோம். க்ரிப்டோ கரன்ஸி எனும் இந்த டிஜிட்டல் கரன்ஸி உலக அளவில் ஆனது. இதன் இன்றைய வர்த்தக மதிப்பு மாத்திரமே ஜஸ்ட் 197 லட்சம் கோடி டாலர்கள் என்கிறார்கள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா……. ஆனாலும்கூட நிஜம் இது தான்.

இந்த க்ரிப்டோ கரன்ஸியில் கோலோச்சும் பிட்காயின் தான் இன்று பலரது தூக்கத்தை கெடுத்து வைத்து இருக்கிறது. இதில் பல க்ரிப்டோ கரன்ஸி இருக்கிறது என்ற போதிலும் இந்த பிட் காயின் மாத்திரமே உலக அளவில் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமான முதலில் வெளிவந்த விருச்சுவல் ரூபாய் நாணயம்… டாலர்… என எப்படி வேண்டுமானாலும் இதை வைத்துக் கொள்ளலாம்.

ALSO READ:  வண்ணத்தில் மின்னும் பாம்பன் பாலம்! நாளை திறப்பு!

நாம் முதலில் பார்த்த கணினி மென்பொருள் மொழியின் நினைவக அலகான பிட்டுடன் இதனை சமன் செய்கிறார்கள். அப்படி புரிந்து கொள்ள சொல்கிறார்கள்.

ஆச்சா…. இந்த பிட்காயின் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சமயத்தில் இதன் சந்தை மதிப்பு நம் இந்தியாவில் 1780 ரூபாய் மட்டுமே….. அதன் இன்றைய மதிப்பு ஐம்பத்தி மூன்று லட்சம் டாலர்கள். அதாவது ஒரு பிட்காயின் மதிப்பு மாத்திரமே இது.

எந்த ஒரு தொழில் முதலீடும் இத்தனை பெரிய லாப விகிதாசாரத்தை தந்திருக்காது. அன்று யார் ஒருவர், ஒரு பிட்காயின் வாங்கி இருந்தாலும் இன்று அவர் கோடீஸ்வரர்.

அவ்வளவு தான்… நம்மவர்களை கேட்கவா வேண்டும்…….. பித்து பிடித்து அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஷேர் மார்க்கெட்டை விட மோசமான பிஸினஸ் போலவே ஆகியிருக்கிறது. நம் இந்தியாவில் இதனை அரசு இன்னமும் அங்கீகரிக்கவில்லை…. அங்கீகரிக்கும் உத்தேசமும் இல்லை. ஆனால் இதனை தடை செய்ய முடியவில்லை. தடை விதித்த போது உச்ச நீதிமன்றம் வரை சென்று சண்டை பிடிக்க ஒரு கூட்டமே தயாராக நின்றது. ஆதலால் ஸைபர் செக்யூரிட்டி மூலமாக கட்டுப்படுத்த… கண்காணிக்க… முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. பலன் கிட்டதட்ட பூஜ்யம் தான்.

crypto currency
crypto currency

இது எதுவுமே சரியாக தெரிந்து கொள்ளாமல்….. இதில் முதலீடு செய்வதாக…. செய்து தருவதாக அட்டகாசமான வலைப் பின்னலை வகுத்து செயல் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் தற்போது நம் தமிழகத்தில்! பங்கு சந்தையை விட மிக ஆபத்தான… அபாயகரமான முதலீடு இது.

நாளை எது ஒன்று என்றாலும் கூட புகார் கொடுக்க எந்த ஒரு தடயமும் இல்லாத வகையில் தான் இந்த வலைப்பின்னல் தளங்கள் செயல்படுகின்றன.

இவற்றை எதனையும் கண்டுக்கொள்ளாமல்… சட்டை செய்யாமல் கிட்டத்தட்ட ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நம் தமிழகத்தில் மாத்திரமே கடந்த மூன்று மாதங்களில் முதலீடு செய்யப் பட்டுள்ளது என்று சொல்லி அதிர்ச்சி அளித்து இருக்கிறார்கள் இதில் ஈடுபட்டவர்கள். இப்படி முதலீடு செய்த பலரும் படித்தவர்கள், சாமானியர்கள்… நடுத்தர வர்க்கம் என்பது தான் இதில் வேதனை தரும் விஷயமாக இருக்கிறது.

ALSO READ:  நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு!

இணையத்தை நன்கு புரிந்து கொண்டவர் இந்த பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார்கள்…. காரணம் இதில் புழங்கும் தொகை மருந்துக்கு கூட நல்ல விஷயங்களுக்கு பயன் படவில்லை. சமூக விரோத செயல்களுக்கு தான் பயன் படுத்துகிறார்கள். ஆள் அடையாளம் தெரியாத செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்… நேரடியான காரியங்களாக இருக்கப் போவதில்லை.

கணினி வழி சூதாட்டம் முதல் போதை வஸ்து பரிமாற்றம் வரையிலும் நிழலான காரியங்களுக்கு இந்த க்ரிப்டோ கரன்ஸி பயன் படுத்தப்படுகிறது.

தொழில் முகவர்களை இதில் இழுக்கும் வண்ணம் அவர்களிடம் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது என்பது போன்ற பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்க ஆகும் செலவில் பாதியளவு இந்த வகை க்ரிப்டோ கரன்ஸி கொடுத்தால் போதும் என்பது போன்ற செயல்பாடுகளை இது கொண்டு இருக்கிறது.

ஒரு வளமான சமுதாயத்திற்கு இவையெல்லாம் சாபக்கேடுகள்…. தேசத்தின் வளர்ச்சி என்பது அதன் மக்களாகிய நாம் செலுத்தும் வரியில் தான் அடங்கி இருக்கிறது. அதனை குறுக்கு வழியில் குழி பறிக்கும் வேலை தான் இந்த க்ரிப்டோ கரன்ஸி சமாச்சாரம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு குதித்தவர்களுக்கு…. கேலி பேசியவர்களுக்கு இந்த டிஜிட்டல் கரன்ஸி பற்றி தெரியாதிருக்குமா என்ன. ஆனால் மூச்சே விடவில்லை யாரும்!

நாம் தான் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காரணங்கள் எதுவாக இருந்தாலும்…..அவை நியாயமானதாகவே இருந்தாலுமே கூட இந்த பக்கம் தலை வைத்து படுத்துவிடாதீர்கள். இதில் முதலீடு செய்கிறேன் பேர்வழி என கிளம்பி விடாதீர்கள். கவர்ச்சி கரமான ஆரம்ப கால லாபம் நிரந்தரமான வீழ்ச்சிக்கு வித்திட்டு வாழ்க்கையை சீரழித்துவிடும்.

வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்…. அப்போது தான் இது போன்ற விஷயங்களில் மனம் ஈடுபடாதிருக்கும். நாம் பார்க்கும் நபர்கள்…. நமக்கு தெரிந்தவர்களை இதில் ஈடுபடாது பார்த்து கொள்வதும் கூட நமது பொறுப்பு தான் தற்போதைக்கு… வேறு வழி இல்லை.

  • கட்டுரை: ஸ்ரீ ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories