கூகுளை மீண்டும் ஜோக்கர் வைரஸ் மிரட்டத் தொடங்கியுள்ளது. ஜோக்கர் வைரஸ்ஸின் காரணமாக 14க்கும் அதிகமான செயலிகள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் சில செயலிகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த ஜோக்கர் வைரஸ் ஒரு செல்போனுக்குள் நுழைந்தால் அந்த போனில் இருந்து எந்த ஒரு தகவலையும் திருட முடியும். காண்டக்ட் லிஸ்ட், எஸ் எம் எஸ்கள், ஓடிபி போன்ற அனைத்தையும் இந்த வைரஸ் கையாளும். இதனை திருடவும் முடியும்.
2017ம் ஆண்டு முதன் முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 2019க்கு பிறகு இதன் தாக்கம் குறைந்திருந்தாலும் தற்போது மீண்டும் த்லைதூக்க தொடங்கியுள்ளது இந்த வைரஸ்.
இந்நிலையில் கீழ்கண்ட செயலிகளில் ஜோக்கர் வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1.Super-Click VPN
விபிஎன் பயன்பாட்டுக்கான இந்த செயலி தற்போது கூகுளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும் APK ஃபைல் பயன்பாட்டில் உள்ளது
2.Volume Boosting Hearing Aid
இந்த செயலி மூலம் உங்கள் செல்போன் Hearing Aidஆக பயன்படும். இப்போது இந்த செயலி வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது
3.Battery Charging Animation Bubble Effects
அனிமேஷன் எஃபெட்டுக்காக பயன்படுத்தப்படும் செயலி இது. பப்புள் எபெட்டாக இது இருக்கும்
4.Flashlight Flash Alert on Call
இந்த செயலி பின்னால் இருக்கும் பைட் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அழைப்புகள், எஸ் எம் எஸ் வந்தால் லைட் ஒளிர இந்த ஆப் பயன்படுத்தப்பட்டது
5.Easy PDF Scanner
PDFஸ்கேன் செய்யும் வசதிக்காக இந்த ஆப் பயன்படுத்தப்பட்டது
6.Smart TV Remote
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்த Smart TV Remote மூலம், டிவிக்களை இயக்க முடியும். அனைத்து வகை டிவிக்களையும் இந்த செயலி மூலம் இயக்கலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பாக இருந்தது
7.Halloween Coloring
Halloween Coloring தீமாகவும், கேமாகவும் இந்த ஆப் இருந்தது
8.Classic Emoji Keyboard
புது புது எமோஜிகளுக்காக இந்த Classic Emoji Keyboard செயலி இருந்தது. 3000க்கும் அதிகமான எமொஜிக்கள் கிடைக்கப்பெறும் என்பது இந்த செயலியின் ப்ளஸ்.
9.Volume Booster Louder Sound Equalizer
ஆண்ட்ராய்ட் போன்களின் சத்தத்தை அதிகமாக இந்த ஆப் பயன்படுத்தப்பட்டது
10.Super Hero-Effect
புதிய தீமுக்காகவும், எஃபெட்டுக்காகவும் இந்த ஆப் பயன்படுத்தப்பட்டது
11.Battery Charging Animation Wallpaper
பேட்டரி சார்ஜிங்கை பல தீம்களில் பயன்படுத்த இந்த செயலி பயன்படுத்தப்பட்டது
12.Dazzling Keyboard
கீ போர்ட்டை வித்தியாசமாக பயன்படுத்த இந்த செயலி பயன்படுத்தப்பட்டது
13.EmojiOne Keyboard
இதும் ஒரு வகை கீ போர்ட் செயலிதான். எமோஜி வகை கீ போர்டை பயன்படுத்த இந்த செயலி பயன்படுத்தப்பட்டது
14.Now QRCode Scan
QRCode கோட் ஸ்கேன் செய்யும் செயலியாக இது இருந்தது. தற்போது ஜோக்கர் வைரஸ் பட்டியலில் இந்த செயலியும் இடம் பெற்றுள்ளது