இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடவுள் இருக்கின்றார், உங்கள் திசையைப் பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை என இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு சிங்கம் தனது குட்டிகளை காக்க உடன் நடந்து செல்கின்றது.
காட்டில் மிகவும் தைரியமாக தனது குட்டிகளை வழிநடத்தி கொண்டு செல்கின்றது. தாய் சிங்கம் இருக்கும் தைரியத்தில் குட்டியும் எவ்வித பயமும் இன்றி விளையாடி மகிழ்கின்றது. இதனை வாழ்வியலோடு ஒப்பிட்டு இந்திய வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாழ்வில் அனைத்து துன்பங்கள் உங்களை சூழ்ந்து கொண்டாலும் இறுதியாக ஒன்றை மறவாதீர்கள் இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டு உள்ளார் என்பதை என குறிப்பிட்டு கடவுள் இருக்கின்றார்,
உங்கள் திசையைப் பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை என்ற வாசகத்தோடு பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் லைக்ஸ் மற்றும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.