
இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் – 2ம் நாள் ஆட்டம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆட்டநேர இறுதியில் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி விக்கட் இழக்காமல் 129 ரன் எடுத்தது. அதற்கு முன்னர் இந்திய அணி உணவு இடைவேளைக்குச் சற்று பின்னர் வரை ஆடி 345 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணியின் டிம்சௌதீ அற்புதமாக பந்து வீசினார். அவர் 69 ரன் கொடுத்து ஐந்து விக்கட் வீழ்த்தினார். மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் ஜேமிசன் 91 ரன் கொடுத்து மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார். நான்கு விக்கட் இழப்பிற்கு 258 என்ற ஸ்கோரில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியின் ஜதேஜா விரைவில் ஆட்டமிழந்தார். விருத்திமான் சாஹாவும் வந்தவுடன் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியிலேய சதம் அடிக்கும் 16ஆவது இந்திய வீரரானார். இதுவரை அந்தச் சாதனையைச் செய்த வீரர்கள்:-
- லாலா அமர்நாத் 118 இங்கிலாந்து (1933)
- தீபக் ஷோடன் 110 பாகிஸ்தான் (1952)
- ஏஜி கிரிபால் சிங் 100* நியூசிலாந்து (1955)
- அப்பாஸ் அலி பெய்க் 112 இங்கிலாந்து (1959)
- ஹனுமந்த் சிங் 105 இங்கிலாந்து (1964)
- குண்டப்பா விஸ்வநாத் 137 ஆஸ்திரேலியா (1969)
- சுரிந்தர் அமர்நாத் 124 நியூசிலாந்து (1976)
- முகமது அசாருதீன் 110 இங்கிலாந்து (1984)
- பிரவின் ஆம்ரே 103 தென்னாப்பிரிக்கா (1992)
- சவுரவ் கங்குலி 131 இங்கிலாந்து (1996)
- வீரேந்திர சேவாக் 105 தென்னாப்பிரிக்கா (2001)
- சுரேஷ் ரெய்னா 120 இலங்கை (2010)
- ஷிகர் தவான் 187 ஆஸ்திரேலியா (2013)
- ரோஹித் சர்மா 127 வெஸ்ட் இண்டீஸ் (2013)
- பிரித்வி ஷா 134 வெஸ்ட் இண்டீஸ் (2018)
- ஷ்ரேயாஸ் ஐயர் 105 நியூசிலாந்து (2021)
அஷ்வின் 22 பந்துகளில் 20 ரன் எடுத்தது இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. நியூசிலாந்து அணியின் வில் யங், டாம் லாதம் இருவரும் நிதானமாக ஆடி 129 ரன் எடுத்தனர். கடைசி பத்து ஓவர்களில் இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் இந்த இரண்டு பேட்டர்களையும் தடுமாற வைத்தனர். இருப்பினும் நேற்று அடிக்கப்பட்ட ஸ்கோரான 254 கூட இன்று அடிக்கப்படவில்லை. நியூசிலாந்து அணி ஒரு பெரிய முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் அடிக்க வாய்ப்பிருக்கிறது.