
கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குரங்குத் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.
தாய்லாந்து நாட்டில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக லோப்புரி பகுதி திகழ்கிறது. இங்குள்ள குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
அதற்காக குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கு பாரம்பரியமாக கொண்டாடப்படுவது தான் குரங்குத்திருவிழா.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரங்குத்திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது இயல்பு நிலை திருப்பிய நிலையில், இந்த ஆண்டு குரங்குத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
மத்திய தாய்லாந்தில் உள்ள லோப்புரியில் இந்த குரங்குத்திருவிழா நடைபெற்றது. சுமார் இரண்டு டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஆயிரக்கணக்கான குரங்குகள் விருந்து உண்டு மகிழ்ந்தன.

மக்காக்கள் என்றும் அழைக்கப்படும் நீண்ட வால் குரங்குகள் நூற்றுக்கணக்கணக்கில் ஒரே இடத்தில் மக்களால் உருவாகப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களின் குவியல்களின் மீது ஏறி, வாழைப்பழங்கள் மற்றும் அன்னாசிப்பழங்களைச் சாப்பிடுவதை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
சில சுற்றுலாப் பயணிகள் குரங்குகள் ஒன்றுக்கொன்று விளையாடுவதை கேமரா மூலம் படம் பிடித்து மகிழ்ந்தனர்.