
எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா மற்றும் நிஜாமுதீனுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்.எச்.பி., பெட்டி இணைக்கப்பட ரயில்வே முடிவு செய்துள்ளது.
நீண்ட துாரம் அதிக பயணிகளுடன் இயங்க கூடிய ரயில்கள் அதிநவீன வசதி கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.
எர்ணாகுளம் – நிஜாமுதீன் ரயிலில், டிச., 12 முதல் 21 வரை எல்.எச்.பி., பெட்டி பொருத்தப்படுகிறது. எர்ணாகுளம் – பாட்னா எக்ஸ்பிரஸில், 2022ம் ஆண்டு ஜன., 15 முதல் பிப்., 12 வரை எல்.எச்.பி., பெட்டி பொருத்தப்படுகிறது.
சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ”ஜெர்மன் தொழில்நுட்பத்தை கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளை பொருத்தி, 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்க முடியும்.
அதிக இருக்கை, பயோடாய்லெட், வெயில் மற்றும் குளிர்காலங்களில் ஒரே மாதிரியான வெப்பநிலை இருக்கும். பெரிய ஜன்னல், விபத்து நேரங்களில் பெட்டிகள் எளிதில் கவிழாத வகையிலும், தீப்பிடிக்காத வகையிலும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, தானியங்கி கதவு உள்ளிட்ட சொகுசு வசதிகளை கொண்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் இரண்டு வாராந்திர அதிவிரைவு ரயில்களில் எல்எச்பி என்னும் நவீன பெட்டிகள் சேர்க்கப்படவுள்ளன.
ஹௌரா-மைசூா் வாராந்திர அதிவிரைவு ரயிலில் (22817) டிசம்பா் 3-ஆம் தேதி முதலும் மைசூரு-ஹௌரா வாராந்திர அதிவிரைவு ரயிலில் (22818) டிசம்பா் 5-இலிருந்தும் ஹௌரா-புதுச்சேரி வாராந்திர அதிவிரைவு ரயிலில் (12867) டிசம்பா் 5-இலிருந்தும் புதுச்சேரி-ஹௌரா வாராந்திர அதிவிரைவு ரயிலில்(12868) டிசம்பா் 8-இலிருந்தும் இயக்கப்படவுள்ளன.