
நாகர்கோவில் அருகே திருமண நடைபெற இருந்த நேரத்தில் மாப்பிள்ளைக்கு 21 வயது பூர்த்தி ஆகாததால் திருமணத்தை நிறுத்திய சமூக நலத்துறை அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கருங்கல் ஊரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் அஸ்வின் ஜீனோ. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தபோது அஸ்வினின் தாய் தனது மகனுக்கு 21 வயது முடிய வில்லை எனவே திருமணம் நடத்த அனுமதிக்க கூடாது என மாவட்ட சமூக நல அலுவலரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து காதல் ஜோடிகள் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. பின்னர் சான்றிதழ்கள் சரிபார்த்த பின்னர் மாப்பிள்ளைக்கு 21 வயது ஆகாதது தெரிய வந்ததையடுத்து ஐஸ்வர்யாவை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.