
நீலகிரியின் கெத்தை அணை அருகே மூன்று குட்டிப் புலிகளுடன் தாய் செல்லும் வீடியோ ஒன்றை அம்மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் சுப்ரியா பதிவு செய்திருந்தார்.
அந்த தாய் புலி செய்த ஒரு சிறிய நிகழ்வு நெட்டிசன்கள் மத்தியில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கெத்தை அருகே தன்னுடைய குட்டிகளுக்கு பாடம் எடுக்கும் அம்மா. அந்த அம்மா தன்னுடைய குட்டிகளை எப்படி கவனித்துக் கொள்கிறாள் என்று பாருங்கள் என்ற கேப்ஷனுடன் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் மூன்று குட்டிப் புலிகள் தன் தாய் புலி சென்ற பாதையில் மேற்கொண்டு முன்னேறிச் செல்வதா என்ற குழப்பத்தில் இருக்கின்றன.
சில அடிகள் முன்னாடி சென்றுள்ள அந்த தாய் மேற்கொண்டு முன்னேறிச் செல்வதை நிறுத்திவிட்டு தன்னுடைய குட்டிகள் என்ன செய்கிறது என்று திரும்பிப் பார்க்கிறது.
இந்த வீடியோவிற்கு பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். அந்த தாய் புலி திரும்பிப் பார்த்ததும் குட்டிகள் அந்த தாயை நோக்கி முன்னேறிச் சென்றதா என்பது தான் தெரியவில்லை.