
ரெப்போ வட்டி விகிதம் 9 ஆவது முறையாக மாற்றமின்றி 4 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன்பெறும் வணிக வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டி வட்டி ஆகும்.
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் போது, வணிக வங்கிகள் மக்களுக்காக வழங்கும் கடன்களில் வட்டித்தொகை குறைய வாய்ப்பு உள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக பல மாதங்களாக ரெப்போ விகிதம் மாற்றப்படாமலேயே உள்ளது.
இந்நிலையில், இருமாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில், ரெப்போ விகிதம் மாற்றப்படுமா என எதிர்பார்ப்புகள் எழுந்தது.
ஆனால், அதில் எந்தவித மாற்றமில்லாமல் தொடரப்போவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பையில் இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையின் மாதாந்திர கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நிறைவடைந்த பின் ரிசர்வ் வங்கியின் ஆளுநர், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவித்தார்.
அதன்படி, குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (4%) மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் (3.5%) எந்தவித மாற்றமுமின்றி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.