ஆப்கனில் இருந்து இந்தியர்களை மீட்ட மத்திய அரசு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
flight 1 - 2026

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது, ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இதனால், ஆப்கானிஸ்தானில் சிக்கி தவித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை அந்தந்த நாட்டு அரசுகள் வெளியேற்றி வருகின்றன.

இந்தியாவும், இந்திய உலக மன்றத்துடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வருகிறது.

இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து சிக்கித் தவித்த 565 இந்தியர்களை தில்லி அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு மக்களவையில் சமீபத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த மேலும் 100 இந்தியர்களை நேற்று விமானம் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்து இந்திய உலக மன்ற தலைவர் புனீத் சிங் சந்தோக் கூறுகையில், மத்திய அரசால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறப்பு விமானம் இன்று தில்லிக்கு விரைந்துள்ளது.

இதன்மூலம் இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகள், இந்து மற்றும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஆப்கானிய குடிமக்கள் ஆகியோர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு சோப்தி அறக்கட்டளை மூலம் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.