இந்த வீடியோவில் இருப்பது நீங்கதான்.. மெசேஜை கிளிக் செஞ்சிங்க.. எச்சரிக்கும் சோபோஸ்!

Published:

meta - 2026

இந்த வீடியோவில் இருப்பது நீங்களா?’ என முகநூல் மெசென்ஜரில் உங்களுக்கு மெசேஜ் வந்தால் நீங்கள் ஹேக் செய்யப்படலாம் என ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் வளர வளர அதோடு சேர்ந்து ஆபத்துக்களும் வளர்ந்து வருகிறது. குறிப்பாக ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், ஹேக்கர்கள் அதனை எளிதாக ஹேக் செய்து விடுகிறார்கள். ஹேக்கர்கள் பலதரப்பட்ட டெக்னிக்குகளை ஹேக் செய்வதற்காக பயன்படுத்துகின்றனர்.

முன்பெல்லாம் ஃபேஸ்புக்கில் மால்வேர் மெசேஜ்கள், முன்பின் தெரியாத முகவரியிலிருந்து வருவதுபோய், இப்போதெல்லாம் நண்பர்களின் பெயரிலேயே அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறது.

‘உங்களுக்காக ஒரு பரிசு அனுப்பியிருக்கிறேன். இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்’

‘லாட்டரியில் உங்களுக்கு மில்லியன் டாலர் பரிசு விழுந்திருக்கிறது’

‘ஸ்பெஷல் ஆஃபரை பெற இந்த லிங்கை கிளிக் செய்து முன்னேறுங்கள்’

இப்படி பயனாளர்களின் ஆசையைத் தூண்டும் விதமாக மெசெஜ்கள் அனுப்பப்பட்டு வந்தன.

காலப்போக்கில் அம்மாதிரியான மெசெஜ்கள் அனைத்தும் போலியானவை, ஹேக்கிங்கிற்கான மால்வேர் லிங்குகள் என்பது பயனாளர்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் மூலமாக விளக்கப்பட்டது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

அதனால் இப்போது ஹேக்கர்கள் புதிய டெக்னிக்கை கையில் எடுத்துள்ளனர். பயனாளர்களின் ஆசையை தூண்டுவதற்கு பதிலாக அச்சத்தை உருவாக்க ஆரம்பித்துள்ளனர்.

‘இந்த ஆபாச வீடியோவில் இருப்பவர் உங்களைப் போன்றே இருக்கிறார்’
இந்த வீடியோவில் இருப்பது நீங்களா?’
போன்ற அச்ச உணர்வை தூண்டக்கூடிய மெசெஜ்கள் உங்களது நண்பர்களது முகவரியில் இருந்து உங்களது

மெசன்ஜருக்கு வந்து சேரும். அதனை நீங்கள் க்ளிக் செய்தால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

உங்களுடைய சுய விவரங்கள் திருடப்படலாம், கிரெடிட் கார்டு விவரங்கள், வங்கிக் கணக்கு சம்பந்தமான பாஸ்வேர்ட் திருடப்படலாம், உங்களுக்கே தெரியாமல் உங்களது ஃபேஸ்புக் டைம்லைனில் ஒரு ஆபாச வீடியோ அப்லோட் செய்யப்படலாம், இல்லையெல் உங்களது நண்பர்களின் மெசன்ஜருக்கு அனுப்பிவைக்கப்படலாம். இப்படி ஹேக்கர்கள் தங்களது கைவரிசையை பல வழிகளில் உங்களிடம் காண்பிக்க முடியும்.

சைபர் பாதுகாப்பு நிறுவனமான சோபோஸ், புதிய வகையாக ஃபேஸ்புக் மெசன்ஜர் மூலம் மோசடி நடப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் பயனாளர்களுக்கு அவர்களது நண்பரின் ஃபேஸ்புக் கணக்கில் இருந்து ‘இந்த வீடியோவில் இருப்பது நீங்களா?’ (‘Is it you in the video?’) என்று லிங்க் அனுப்பப்படும்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

இதைப் பார்த்து பதறியடித்துக் கொண்டு நாமும் அதை க்ளிக் செய்வோம். அந்த லிங்கிற்குள் சென்றால், உங்களுடைய முகநூல் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடுமாறு கேட்கும்.

அப்படி மட்டும் நீங்கள் செய்துவிட்டீர்கள் என்றால், அதை வைத்து உங்களுடைய அக்கவுண்ட்ட் ஹேக் செய்யப்படும். பார்ப்பதற்கு முகநூல் லாகின் போல இருக்கும். நீங்கள் உள்ளே சென்ற பின்னர், ‘there is no video’ என வந்து, ஸ்கிரின் ப்ளாக்-காக மாறி, மீண்டும் அந்த லாகின் பக்கத்திற்கு அனுப்பும்.

இதன்மூலம் உங்களின் நண்பர் அல்லது அந்த லிங்கிற்குள் சென்றவர்களின் ஐடி-யை வைத்து அதில் இருக்கும் நண்பர்களுக்கு இதே லிங்கை அனுப்புவார்கள்.

அதனால் இதுபோன்ற லிங்குகள் வந்தால் அதற்குள் போகாமல் இருப்பது நல்லது என எச்சரித்துள்ளது.

போலி லாகின் இணைப்பை எப்படி கண்டறிவது?

ஃபேஸ்புக் தனது அனைத்து சேவைகளுக்கு Hypertext Transfer Protocol Secure எனப்படும் HTTPS-ஐ ஆரம்பமாக கொண்டது. எனவே HTTPS அல்லாத, வேறு வார்த்தைகள் ஆரம்பமாக வந்தால், அது போலியானது என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

மேலும் அதன் அருகிலேயே லாக் செய்யப்பட்ட பூட்டு போன்ற அடையாளத்தையும் நம்மால் பார்க்க முடியும். இதன் மூலம் நீங்கள் வந்துள்ளது போலியான முகநூல் லாகினுக்கு என்பதை கண்டறிந்து கொள்ளலாம்.

இந்த மோசடியில் மற்றொரு அம்சமும் இருப்பதாக சோபோஸ் நிறுவனம் கூறுகிறது.

‘ஃபேஸ்புக் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை போலி உள்நுழைவு பக்கத்தில் உள்ளிட்ட பின்பு, பாதிக்கப்பட்டவர் மற்றொரு மோசடி தளத்திற்கு திருப்பி விடப்படலாம் என்ற பகீர் எச்சரிக்கையையும் கொடுத்துள்ளது.

Related articles

Recent articles

spot_img