
பூமியில் பெரும்பான்மை பகுதி கடலால் நிரம்பியுள்ளது. பூமியின் நிலப்பகுதியில் இருக்கும் ஆச்சரியங்களை விட கடலில் இருக்கும் ஆச்சரியங்கள் அதிகம்.
இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ உயிரினங்கள் கடலில் இன்றும் வாழ்ந்து வருகின்றன. கடல் ஆராய்ச்சியில் புதுப்புது கண்டுபிடிப்புகள் அனுதினமும் நடந்து வருகிறது. அப்படியான ஒரு மீன்வகையை தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எத்தனையோ ஆச்சரியமான மீன் வகைகள் கடலில் உள்ளன. அந்த வகையில் இந்த புதிய மீன் வகையும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.
விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த மீனுக்கு தலை கண்ணாடி போல உள்ளது. அதாவது உள்ளுறுப்புகளை எல்லாம் தெள்ளத்தெளிவாக வெளியில் இருந்து பார்க்கலாம்.
அந்த மீனின் பெரிய தலை மட்டுமே கண்ணாடி போல உள்ளது. அதேபோல மீனின் வால்பகுதியும் கண்ணாடி போலவே இருக்கிறது.

இந்த மீனின் வீடியோ MBARI (Monterey Bay Aquarium Research Institute) என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்தவீடியோவில் ஆழ்கடலில் மீன் மெதுவாக நீந்திச் செல்கிறது.
பார்வைக்கு அந்த மீன் தலையிலும், வாலிலும் விளக்கு எரிவதைப் போல தெரிகிறது. இந்த மீன் குறித்து பலரும் தங்களது ஆச்சரியங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கண்ணாடி மீன் உண்மையிலேயே ஒரு ஆச்சரியம் என பதிவிட்டுள்ளனர்.