ஆதார் + ஓட்டர் ஐடி இணைக்க வழி!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
aadhar
aadhar

தேர்தல் திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மசோதாவின் ஒரு சிறப்பம்சமாக ஆதார் மற்றும் வாக்காள அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்தியாவில் உள்ள ஓவ்வொரு குடிமகனுக்கு தனித்துவமான அடையாள அட்டையாக வாக்களர் அட்டையும், ஆதார் அட்டையும் உள்ளது.

எனவே, தான் அரசாங்க பணிகளில் இவை இரண்டையும் முக்கிய ஆவணங்களாக சேர்த்து வருகின்றனர். ஆதார் எண் அரசாங்கத்தின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களிலும் இணைக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, பேன் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

election card - 2026

இந்நிலையில் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதார் – வாக்காளர் அட்டையை இணைக்க மூன்று எளிதான வழிமுறைகள் உள்ளன.

தேசிய வாக்காளர் சேவையகத்தின் அதிகாரபூர்வ வலைதளம், குறுஞ்செய்தி (SMS), தொலைபேசி அழைப்பு என 3 விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

தேசிய வாக்காளர் சேவையகத்தின் மூலம் ஆதார் இணைப்பதற்கான எளிய வழிமுறைகள்:

முதலில் https://voterportal.eci.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் மொபைல் எண், இ-மெயில் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து Login செய்ய வேண்டும்.

அதன்பின் தோன்றும் பக்கத்தில் வாக்காளரின் பெயர், ஊர், மாவட்டம், மாநிலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்து Search பட்டனை கிளிக் செய்து தரவுகளை சரிபார்க்க வேண்டும்.

விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் Feed Aadhaar No என்பதை கிளிக் செய்து ஆதாரில் உள்ள விபரங்களை கொடுத்து Submit செய்ய வேண்டும்.

அதேபோல் 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமாகவும், 1950 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்வதன் மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.