டீக்கடை வந்த சிறுத்தை..!

Published:

Leopard cub - 2026

குன்னூர் பேருந்து நிலையதில் உள்ள டீ கடையில் புகுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஒன்று பேருந்து நிலையத்தில் இருந்த தனியார் டீக்கடைக்குள் புகுந்தது.

இதையடுத்து பூனையை என நினைத்து கடையில் இருந்தவர்கள் அதனை விரட்ட முயன்ற போது, அவர்களை தாக்கி சீறியுள்ளது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறுத்தை குட்டியை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

Related articles

Recent articles

spot_img