விண்வெளி நிலையத்தில் முடித்திருத்தம் செய்வதும் அவ்வளவு எளிதில் செய்ய முடியாத ஒன்று.
அவ்வாறு விண்வெளி நிலையத்தில் ஒரு விண்வெளி வீரருக்கு மற்றொரு விண்வெளி வீரர் முடித்திருத்தம் செய்யும் வேடிக்கையான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐரோப்பிய விண்வெளி வீரர் மத்தியாஸ் மவுரர், மக்களின் பார்வைக்காக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் மத்தியாஸ் மவுரர் மண்டியிட்டுக்கொண்டு விண்கலனை தனது இரண்டு கைகளாலும் இறுக்கமாக பிடித்திருக்கிறார்.
மவுரரின் தலைமுடியை வெட்டுவதற்காக நாசா விண்வெளி வீரரான ராஜா சாரி ட்ரிம்மரை எடுத்து அவரின் முடியை திருத்தம் செய்கிறார்.
இந்த வீடியோவை பதிவிட்டவர், அதற்கு கேப்ஷனாக ” பார்பர் @astro_raja திறமையானவர், அனைவரும் விண்வெளி நிலையத்திற்குச் செல்லுங்கள், அங்கு பல திறமைகளைக் கொண்ட முடிதிருத்தும் ராஜா சாரி இருக்கிறார்.
நம்மில் யாரும் நம் கண்களில் படும் வரை வளரும் முடியை விரும்பவில்லை. இந்த விண்வெளி வீரரின் ஒப்பனையாளர் சேவைக்கு ஐந்து நட்சத்திரங்கள் வழங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு ‘மிதக்கும் பீட்சா பார்ட்டி’ மற்றும் விண்வெளி வீரர்களின் உடற்பயிற்சி போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வந்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள ஹேர்கட் வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.