mobile - 2026

பிறந்த நாள் பரிசளித்த மகன்.. எதுக்குடா தாய் காட்டிய அதிர்ச்சி.. நடிகர் மாதவன் போட்ட ட்வீட்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினிமா தமிழகம் லைஃப் ஸ்டைல்
mobile - 2026

பெற்றோர் பிள்ளைகள் ஏதாவது ஒரு பரிசை வாங்கி கொடுத்தால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இருக்காது. அப்படி ஒரு சம்பவம் தாம் சமீபத்தில் நடந்துள்ளது.

இதுதொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,’இந்த மொபைல் போனின் விலை 8800 ரூபாய் தான்.

ஆனால் அதற்கு என்னுடைய அம்மா அடைந்த சந்தோஷத்திற்கு விலையே கிடையாது. அவர்களின் பிறந்தநாள் பரிசு’ எனப் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவருடைய தாய் அந்த மொபைல் போனை பார்த்தவுடன் எதற்கு இந்த போன் என்று கேட்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தாய்க்கு பிறந்தநாள் பரிசாக மொபைல் போன் வாங்கி கொடுத்த மகனின் இந்த வீடியோ பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், ‘இந்த மகிழ்ச்சிக்கு விலை இல்லை’ எனக் கூறி இந்த வீடியோ பதிவை ரீட்வீட் செய்துள்ளார்.

அதன்பின்னர் இந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது. தாய்க்கு மகன் கொடுத்த பாசமான பிறந்தநாள் பரிசு தொடர்பாக பலரும் தங்களுடைய நெகிழ்ச்சியான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.