ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட், ஆசஸ் ஜென்புக் 14 ஓஎல்இடி: சிறப்பம்சங்கள்..!

Published:

laptop - 2026

CES 2022 நிகழ்வில் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓஇஎம்-கள் லாஸ் வேகாஸின் சிஇஎஸ் 2022 நிகழ்வில் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன

ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் மற்றும் ஜென்புக் 14 ஓஎல்இடி லேப்டாப்கள் சிஇஎஸ் 2022 நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளன. CES 2022 நிகழ்வில் அசுஸ் ஜென்புக் 17 ஃபோல்ட், ஜென்புக் 14 ஓஎல்இடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்களானது புதிய இன்டெல் ஏஎம்டி சிப் வசதியோடு வருகிறது.

ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் மற்றும் ஆசஸ் ஜென்புக் 14 ஓஎல்இடி ஆகிய இரண்டு சாதனங்களும் ஏஎம்டி மற்றும் இன்டெல்-ன் சமீபத்திய அம்சங்களை கொண்டுள்ளன. அதேபோல் இதன் வடிவமைப்பை பொறுத்தவரை மடிக்கக்கூடிய இரட்டை காட்சி மடிக்கணினி மற்றும் பலவற்றை இது கொண்டிருக்கிறது.

அசுஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் லேப்டாப் ஆனது மிகவும் தனித்துவமான அம்சங்கள் உடன் வருகிறது. இது மடிக்கக்கூடிய அம்சத்தை கொண்டிருக்கிறது. சாதாரண நிலையில் இருந்து இந்த மடிக்கணினியை விரிவுப் படுத்தினால் இதை 17.3 இன்ச் ஓஎல்இடி பேனல்களுடன் க்யூஎச்டி தெளிவுத்திறன் ஆதரவுடன் வாங்கலாம்.

அதேபோல் இதை மூடிய நிலையில் அதாவது பகுதியளவு மூடப்பட்ட நிலையில் பயன்படுத்தினாலும் இதன் சிறய 12.5 இன்ச் முழு எச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் பயன்படுத்தக் கிடைக்கிறது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இதன் பெரிய டிஸ்ப்ளே 2560 x 1920 பிக்சல்கள் தீர்மானம், 100 சதவீதம் DCI-P3 வண்ண வரம்பு, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட்-ன் செயலி விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

சமீபத்திய இன்டெல் சிபியூ ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் மூலம் பேக் செய்வதாக கூறப்படுகிறது. ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் ஆனது 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியோடு வருகிறது.

ஃவைபை 6இ, ப்ளூடூத் 5.2, தண்டர்போல்ட் 4, யூஎஸ்பி டைப் சி போர்ட், காம்போ ஆடியோ ஜாக் உள்ளிட்ட போர்ட்கள் ஆதரவோடு வருகிறது. 75 வாட்ஸ் பேட்டரி மற்றும் டால்பி அட்மாஸ் குவாட் ஸ்பீக்கர் அம்சத்துடன் வருகிறது.

ஆசஸ் ஜென்புக் 14 ஓஎல்இடி அம்சங்கள் குறித்து பார்க்கையில், ஆசஸ் ஜென்புக் 14 ஓஎல்இடி வசதியோடு வருகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல், இந்த லேப்டாப் ஆனது 2880 x 1800 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் உடன் கூடிய 14 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 550 நிட் பிரகாச ஆதரவு டிசிஐ-பி3 வண்ண வரம்பு அம்சம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியுடன் வருகிறது. இந்த லேப்டாப்பிற்கான வைஃபை 6 டபிள்யூ மற்றும் ப்ளூடூத் 5.2 ஆதரவை ஆசஸ் கொண்டிருக்கிறது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

ஆசஸ் ஜென்புக் 14 ஓஎல்இடி இன்டெல் மற்றும் ஏஎம்டி-ன் சமீபத்திய செயலிகள் மூலம் இது இயக்கப்படும். இது இரண்டு பதிப்புகளில் வருகிறது. ஆசஸ் இன்டெல் 12-வது ஜென் கோர் எச் சீரிஸ் சிப் மற்றும் ஏஎம்டி ரைசன் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் போல் இன்றி ஆசஸ் ஜென்புக் 14 ஓஎல்இடி ஆனது மைக்ரோ எஸ்டி கார்ட், எச்டிஎம்ஐ 2.0 போர்ட் ஆதரவோடு வருகிறது.

மேலும் இன்டெல் பதிப்பானது தண்டர்போல்ட் 4 இணைப்பை பெறுகிறது. புதிய அசுஸ் லேப்டாப் ஆனது 75 வாட்ஸ் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

அசுஸ் ஜென்புக் 17 ஃபோல்ட், அசுஸ் ஜென்புக் 14 ஓஎல்இடி சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை பார்க்கலாம். அசஸ் ஜென்புக் 17 விலை தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த மே மாதம் நடக்க இருக்கும் கம்ப்யூட்டெக்ஸ் நகிழ்வில் இது வெளியிடப்படலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் அசுஸ் ஜென்புக் 14 ஓஎல்இடி விலையும் தற்போது வரை தெரிவிக்கப்படுகிறது. இந்த சாதனங்கள் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Related articles

Recent articles

spot_img