வாட்ஸஅப் நோட்ஸ்: புதிய அப்டேட்!

whatsapp - 2026

உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆன WhatsApp தன் யூஸர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க, அதன் அம்சங்களை நன்றாக மேம்படுத்தும் வகையில் கடந்த சில காலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அதன்படி, வாட்ஸ்அப் புதிய அம்சமாக பாஸ் பட்டனை (pause button) அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து அம்சங்களையும் கண்காணிக்கும் வெப்சைட்டான Wabetainfo-ன் தகவல் படி, WhatsApp இப்போது ஒரு புதிய pause button-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அம்சம் யூஸர்கள் வாய்ஸ் நோட்ஸ்களை ரெக்கார்ட் செய்யும் போது இடையே நிறுத்த அதாவது pause செய்ய அனுமதிக்கும். வாய்ஸ் நோட்ஸ் ரெக்கார்டிங்கின் போது பாஸ் செய்து மீண்டும் துவங்கவும் (pause and resume audio) இந்த அம்சம் உதவும். மேலும் இந்த புதிய pause and resume அம்சம் குறிப்பிட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

முன்னதாக யூஸர்கள் தாங்கள் ரெக்கார்ட் செய்யும் வாய்ஸ் நோட்ஸ்களை தவறின்றி அனுப்ப அவற்றை பாஸ் செய்து பின் பிளே செய்ய அனுமதிக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதே போல சேட்டிற்கு வெளியே வாய்ஸ் நோட்ஸை இயக்கும் விருப்பத்தையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியது.

யூஸர்கள் முன்னதாக குறிப்பிட்ட chat-ல் சென்று தான் வாய்ஸ் நோட்ஸை கேட்க வேண்டியிருந்தது. ஆனால் global audio player என்ற புதிய அம்சம் இப்போது வாய்ஸ் நோட்ஸ்களை கேட்கும் போது யூஸர்கள் மற்ற chat-களுக்கு செல்லவும் அனுமதிக்கிறது.

குளோபல் ஆடியோ பிளேயர் சேட் விண்டோவின் மேல் தோன்றும், மேலும் நீங்கள் குறிப்பிட்ட வாய்ஸ் நோட்ஸ்களை கேட்டு முடித்தவுடன் ஆடியோ பிளேயரை அகற்றுவதற்கான ஆப்ஷனையும் பெறுவீர்கள்.

இதனிடையே WABetaInfo-ன் அறிக்கையின்படி, WhatsApp நிறுவனம் டெஸ்க்டாப் மற்றும் ஐஓஎஸ்-க்கான WhatsApp-ல் லேட்டஸ்ட் அப்டேட்டான பாஸ் & ரெஸ்யூம் வாய்ஸ் ரெக்கார்டிங் அம்சத்தை (pause and resume voice recordings feature) வெளியிட்டுள்ளது.

இந்த அம்சம் ஏற்கனவே குறிப்பிட்ட பீட்டா டெஸ்ட்டர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Wabetainfo-வின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அனைத்து Andriod யூஸர்களுக்கும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. இருப்பினும் ஆண்ட்ராய்டு 2.22.67 புதுப்பிப்புக்கான புதிய வாட்ஸ்அப் பீட்டா வெளியான பிறகு ஆண்ட்ராய்டு யூஸர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 2 முதல் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு இந்த புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது. மேலும் Android 2.22.6.7 புதுப்பிப்புக்கான WhatsApp Business பீட்டாவை நிறுவிய பின் இந்த அம்சம் கிடைக்கும். முந்தைய அப்டேட்டின் அடிப்படையில் ரெக்கார்டிங்கை ஸ்டாப் மட்டுமே செய்ய முடிந்த யூஸர்கள் இந்த புதிய அப்டேட்டின் மூலம் இறுதியாக ஸ்டாப் செய்த பிறகு மீண்டும் அதே வாய்ஸ் நோட்ஸில் தங்களது வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட்டிங்கை தொடரலாம்.

“வாய்ஸ் நோட்ஸ்களை ரெக்கார்ட் செய்யும் போது புதிய pause and resume அம்சத்தை உங்களால் பார்க்கவில்லை என்றால், உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டிற்கு இந்த அம்சம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று அர்த்தம்”. எதிர்காலத்தில் அப்டேட் வெளியிடப்படும் போது உங்களால் இந்த அம்சத்தை பெற முடியலாம் என Wabetainfo தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories