big fish - 2026

எவ்ளோ பெரிய மீனு.. வைரலான வீடியோ!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
big fish - 2026

கனடாவைச் சேர்ந்த யுவெஸ் பிஸ்ஸான் என்ற மீனவர் சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீன்பிடிக்கச் சென்ற போது தனது வாழ்க்கையில் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு மீனை கண்டார்.

அவர் ‘வாழும் டைனோசர்’ என்றும் அழைக்கப்படும் 10.5 அடி நீளமுள்ள ஒரு பிரமாண்டமான ஸ்டர்ஜன் என்னும் பிரம்மாண்ட மீனை கண்டார் . தான் இதுவரை கண்டிராத பெரிய ஸ்டர்ஜன்களில் இதுவும் ஒன்று என்று மீனவர் கூறினார்.

அவர் 250 கிலோ எடையுள்ள மீனைக் கண்டுபிடித்ததைக் காட்டிய ஒரு வீடியோ, மிக வேகமாக TikTok செயலியில் வைரலானது.

கேமராவை நோக்கி ஸ்டர்ஜனின் தலைக்கு எடுத்து காட்ட அவர் சிரமப்படுவதை வீடியோவில் காணலாம். “இதைப் பாருங்கள், இந்த மீன் 10 மற்றும் அரை அடி, அநேகமாக 500, இல்லை 600 பவுண்டுகள் இருக்கும்” என்று வைரல் வீடியோவில் அவர் கூறுகிறார்.

அது கைப்பற்றப்பட்டு அளவிட்ட, ​​மீன்பிடி வழிகாட்டிகள் ஸ்டர்ஜனை RFID சிப்பில் குறியிட்ட பிறகு அதை மீண்டு நீருக்குள் விடுவித்தனர். இதற்கு முன்னர், இந்த மீன் கண்ணில் தென்படவில்லை எனவும் அவர்கள் ஆச்சர்யமாக கூறினர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Yves Bisson கனடாவின் ஃப்ரேசர் நதியில் வாழும் மீனவர். இவர் ஸ்டர்ஜன் வகை மீன்களில் நிபுணர். தனது கண்ணில் பட்ட ஸ்டர்ஜன் மீனுக்கு 100 வயது இருக்கலாம் என்கிறார் அவர்.