திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் கைது..

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே பூந்துறை பகுதியை சேர்ந்தவர் நிகில் ( 23). அப்பகுதியை சேர்ந்த நீனு, சரஸ்வதி ஆகியோர் திருவனந்தபுர அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு டாக்டர் உடையணிந்து வாலிபர் வந்தார். அவர் மேற்கண்ட 2 பெண்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுத்து உள்ளார். மேலும் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக எடுத்து சென்று, அதன் முடிவை கொண்டு வந்து கொடுத்தார். மருத்துவ பரிசோதனை செய்ததாக கூறி 2 பெண்களிடம் வாலிபர் பணம் பெற்று உள்ளார். இந்தநிலையில் நீனு, சரஸ்வதி ஆகிய 2 பேரின் உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக தலைமை டாக்டர் வந்தார். பெண்கள் சிகிச்சை பெற்று வரும் படுக்கைகளில் இருந்த குறிப்பு அட்டையை பார்த்த போது, அதில் சில மருத்துவ குறிப்புகள் தவறாக குறிக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார்.

அதில் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த வாலிபர் போலி டாக்டர் நிகில் என்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்ட வெளிப்புற போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் 2 பெண்களிடம் மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறி ரத்தம் மாதிரி சேகரித்ததும், அதற்காக பணம் பறித்ததும் தெரியவந்தது. மேலும் அதிக நோயாளிகள் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் உடையில் வந்து 10 நாட்களாக சிகிச்சை அளிப்பதாக உலா வந்து உள்ளார்.

தொடர்ந்து பிளஸ்-2 வரை படித்த போலி டாக்டர் நிகிலை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

704737 fake doctor - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories