ரெயிலில் பயணிகளோடு பயணித்த 🐍..

snake on train in kerala triggers panic og - 2026
images 2022 07 29T160511.188 - 2026

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளோடு பாம்பும் பயணித்தால் பயணிகளிடையே பதற்றம் நிலவியது.

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ் 5 தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் உள்ள பயணிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்த பின்பு தூங்குவதற்கு தயாரானார்கள். அப்போது பயணி ஒருவர், தனது இருக்கைக்கு அருகே ஒரு ஓட்டை இருப்பதை கண்டார். அந்த ஓட்டைக்குள் இருந்து லேசான சத்தம் கேட்டது. உடனே அவர் ஒரு குச்சியை எடுத்து அந்த ஓட்டைக்குள் நுழைத்தார்.

அப்போது ஓட்டையில் இருந்து ஒரு பாம்பு சீறியபடி வெளியே வந்தது. அதிர்ச்சி அடைந்த பயணி, அருகில் இருந்த சக பயணிகளிடம் இதனை கூறினார். அதற்குள் அந்த பாம்பு ஓட்டையில் இருந்து வெளியே வந்தது. பின்னர் பயணிகள் அமரும் இருக்கையில் சுருண்டு கிடந்தது. இதை கண்டு பயணிகள், பெண்கள் அலறினர். அவர்கள் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு வந்து பாம்பை தேடினர். அதற்குள் அந்த பாம்பு இன்னொரு ஓட்டைக்குள் புகுந்து மாயமாகி விட்டது. பல மணி நேரம் தேடியும் பாம்பை காணவில்லை. இதையடுத்து அந்த பாம்பு ஓட்டை வழியாக கீழே விழுந்திருக்கலாம் என பாதுகாப்பு படை வீரர்கள் கூறினர். ஆனாலும் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியில் தூங்காமல் இருந்தனர்.

இதற்கிடையே ரெயில் பெட்டிக்குள் பாம்பு இருப்பதை பயணி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் இதுபற்றி கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories