மே.வ நடிகை வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய 2 நாள் சோதனையில் ரூ 49.80 கோடி , 6 கிலோ தங்கம் பறிமுதல்..

images 2022 07 28T163833.630 1 - 2026

நடிகை வீட்டில் தங்க கட்டிகள், காப்புகள், தங்கத்தால் ஆன பேனா மற்றும் நகைகளை அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .நடிகை வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய 2 நாள் சோதனையில் 21.90 கோடி மற்றும் 27.90 என சுமார் மொத்தம் 49.80 கோடி பணத்தையும், 6 கிலோவுக்கு அதிகாமான தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

மேற்குவங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டவர் பார்த்தா சாட்டர்ஜி ( 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள பார்த்தாவின் வீட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து பெல்ஹச்ஷியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அர்பிதா பானர்ஜியின் வீட்டில் 21.90 கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜியையும், அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறையினர் கடந்த 23-ம் தேதி கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையை தொடர்து பார்த்தா சாட்டர்ஜியை மந்திரி பதவியில் இருந்தும் கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில், கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை வரும் 3-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறையினரிடம், பெல்கஞ்யா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு மேலும் ஒரு வீடு உள்ளதாக அர்பிதா முகர்ஜி தெரிவித்தார். இந்நிலையில், பெல்கஞ்யா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணமும், நகையும் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் பல பெரிய பைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பைகளில் செங்கல் அமைப்பில் பல பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை திறந்து பார்த்தபோது அதில் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக இருந்தன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 50 லட்ச ரூபாய் பார்சலாகவும், 500 ரூபாய் நோட்டு 20 லட்ச ரூபாய் பார்சலாகவும் கட்டப்பட்டு பல பார்சல்கள் இருந்தன. அந்த வீட்டில் நடந்த சோதனையில் மொத்தம் 27 கோடியே 90 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர், அந்த வீட்டில் இருந்த ஒரு லாக்கர் அறையை திறந்தபோது அங்கு தலா ஒரு கிலோ எடைகொண்ட 3 தங்க கட்டிகள் (3 கிலோ), தலா 1/2 கிலோ (அரை கிலோ) எடைகொண்ட 6 தங்க காப்புகள் (கை காப்புகள்) (3 கிலோ), தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் ஆன பேனா ஆகியவை இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தங்க கட்டிகள், நகைகளின் மதிப்பு 4.31 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை நடத்திய 2 நாள் சோதனையில் அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 21.90 கோடி மற்றும் 27.90 என சுமார் 50 கோடி ரூபாய் (மொத்தம் 49.80 கோடி) பணத்தையும், 6 கிலோவுக்கு அதிகாமான தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

795917 ed - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories