ஆட்டோ ஓட்டுனருக்கு ஓணம் பம்பர் பரிசு ரூ.25 கோடி ..

கேரளாவில் மகனின் உண்டியல் பணத்தில் வாங்கிய லாட்டரி சீட்டில் ஆட்டோ ஓட்டுனருக்கு ஓணம் பம்பர் பரிசு ரூ.25 கோடி பரிசு விழுந்து உள்ளது.

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பின்பு ஓணம் பண்டிகை இந்த ஆண்டு சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டன. இதில், திருவனந்தபுரம் நகரில் ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அனூப் என்பவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்து உள்ளது. 30 வயதில் இந்த பரிசு தொகையை வென்றுள்ள அனூப் கூறும்போது, நான் ஒரு சமையல் கலைஞர். எனக்கு சமைப்பதில் விருப்பம். உணவு விடுதி ஒன்றை தொடங்க வேண்டும் என்பது எனது கனவு. அதனால், சிறிது தொகையை அதில் முதலீடு செய்வேன் என கூறியுள்ளார். இதற்கு முன்பும் அவர் ரூ.5 ஆயிரம் பரிசு தொகையை வென்றிருக்கிறார். இவரது மனைவி மாயா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

லாட்டரி சீட்டு வாங்க பணம் பற்றாக்குறையாக இருந்துள்ளது என கூறும் அனூப், தனது மகனின் சேமிப்புக்காக வைத்திருந்த உண்டியல் தொகையை கொண்டே பரிசுக்கான லாட்டரி சீட்டை வாங்கினேன் என கூறியுள்ளார்.

அவருக்கு பரிசு கிடைத்ததும் அதுபற்றி செய்தி சேகரிக்க ஊடக துறையினர் அவரை தேடி சென்றுள்ளனர். இதுபற்றி அனூப் கூறும்போது, பரிசு தொகை வென்றது பற்றி முதலில் நம்பவே முடியவில்லை. அதனால், மனைவியிடம் மீண்டும் விவரங்களை ஆய்வு செய்யும்படி கூறினேன். ஒரு குளியல் எடுத்து கொண்டு வந்தேன். முடிவுகளை பார்த்தேன். இன்னும் அந்த பதற்றத்தில் இருந்து வெளிவரவில்லை என அவர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் லாட்டரி சீட்டை வாங்கினேன். லாட்டரி ஏஜென்சியில் வேலை செய்யும் எனது சகோதரியிடம் இருந்து சீட்டை வாங்கினேன் என கூறும் அனூப், முதலில் வேறொரு சீட்டை வாங்கினேன். அதன்பின்னர், கடைசி தருணத்தில் பரிசுக்கான இந்த சீட்டை வாங்கினேன். மகிழ்ச்சியாகவும், பதற்றமுடனும் உள்ளது என அவர் கூறியுள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரி மறைவுக்கு பின்னர் நிதி நெருக்கடியில் சிக்கி போராடி வந்தேன் என்றும் இந்த வெற்றி தனது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றும் அவர் கூறுகிறார். அனூப்புக்கு வரி கழிவு போக, ரூ.15.75 கோடி பரிசு தொகை கிடைக்கும். 2-வது பரிசு ரூ.5 கோடி மற்றும் 3-வது பரிசு ரூ.1 கோடியானது தலா 10 வெற்றியாளர்களுக்கு கொடுக்கப்படும்.

image 1 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories