December 8, 2025, 1:12 PM
28.2 C
Chennai

எருமை, பசு,  சக்கரம்.. ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு கண்திருஷ்டியா?

Capture.jpeg 1 - 2025

-வந்தே பாரத் ரயில் மூன்றாவது நாளாக  செய்தியில் இடம்பெற்றுவிட்டது. புதுடெல்லி – வாராணசி இடையே சனிக்கிழமை காலை இயக்கப்பட வேண்டிய வந்தே பாரத் ரயிலின் சக்கரம் ‘ஜாம்’ ஆனதால், பயணிகள் வேறு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நல்லவேளையாக, பணியிலிருந்த ஊழியர் சக்கரம் ஜாம் ஆகியிருப்பதைக் கவனித்ததால், பாதி வழியில் ரயில் இயக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. ஒரு வேளை சக்கரங்கள் ஜாம் ஆகியிருப்பது கவனிக்கப்படாமல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டிருந்தால் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குஜராத்தில் வெள்ளிக்கிழமை பசு மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலின் முகப்புப் பகுதி லேசாக நசுங்கியது. ஏற்கெனவே வியாழக்கிழமை எருமைக் கூட்டம் மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் என்ஜினின் கூம்பு வடிவ முகப்புப் பகுதி சேதமடைந்தது. 

தொடா்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை வந்தே பாரத் ரயிலில் ஏறிய பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.டெல்லியிலிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைர் ரயில் நிலையத்தில் இன்று காலை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது. பிறகு, பிற்பகலில் அதிலிருந்த பயணிகள் சதாப்தி ரயிலில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம்
மணிக்கு 160 கி.மீ. வரையிலான வேகத்தில் செல்லக் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை மும்பை- காந்திநகா் இடையே அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தாா். 

முதல் சம்பவமாக அகமதாபாத் அருகே வியாழக்கிழமை தண்டவாளத்தில் நின்றிருந்த எருமைக் கூட்டம் மீது இந்த ரயில் மோதி இருந்தது. இதில் 4 எருமைகள் உயிரிழந்தன. ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. எனினும், ரயிலின் முக்கிய பாகங்களில் எந்த சேதமும் ஏற்படாததால் ரயில் தொடா்ந்து இயக்கப்பட்டது. பின்னா், மும்பை வந்ததடைந்ததும் ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதி உடனடியாக மாற்றப்பட்டது. 

இந்த நிலையில், இரண்டாவது சம்பவம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது.இரண்டாம் சம்பவமாக, குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதி அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது ஒரு பசு மீது மோதியது. இதில் முகப்புப் பகுதி லேசாக நசுங்கியதாகவும் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மேற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அதிகாரி சுமித் தாக்குா் தெரிவித்திருந்தார்..

ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘கால்நடைகள் மீது ரயில் மோதும் சம்பவங்கள் தவிா்க்க முடியாதது. விபத்துகளின்போது எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வந்தே பாரத் ரயில் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் கூம்பு வடிவ முகப்பு பகுதி முழுமையாக மாற்றக் கூடியதாகும். அடுத்தகட்டமாக மேம்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 200 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும்’ என்றாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories