அரசு பங்களாவை காலி செய்கிறார் சுப்பிரமணியன் சுவாமி..

images 85 - 2026

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதையடுத்து அரசு பங்களாவை காலி செய்வதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

மத்திய முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமிக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, தில்லியில் அவருக்கு அரசு பங்களா கடந்த 2016, ஜனவரி 15-ஆம் தேதி 5 ஆண்டு காலத்துக்கு ஒதுக்கப்பட்டது. அந்த காலம் முடிந்தும் சுப்பிரமணியன் சுவாமி அதில் தங்கியிருக்கும் வகையில், அதனை மறுஒதுக்கீடு செய்யக் கோரி, தில்லியில் உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மேலும் அவருக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் தில்லியில் உள்ள தமது சொந்த இல்லத்தில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கில், ‘சுப்பிரமணியன் சுவாமிக்கான இசட் பிரிவு பாதுகாப்பு நீடித்து வருகிறது. ஆனால், அரசின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்படி, இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பவா்களுக்கு அரசு பங்களா ஒதுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. அதே பங்களாவை மறுஒதுக்கீடு செய்வது சாத்தியமில்லை. அவா் மாறக் கூடிய குடியிருப்பு வளாகத்தில் உரிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு முகமைகள் மேற்கொள்ளும்’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தொடர்ந்து, சுப்பிரமணியன் சுவாமிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து விரிவான பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மா உத்தரவிட்டார். 

அதன்படி, சுப்பிரமணியன் சுவாமிக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது. மேலும் தில்லியில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் முறையான பாதுகாப்பு வழங்குவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளது. 

இதையடுத்து தில்லியில் அரசு பங்களாவை காலி செய்வதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். முன்னதாக, ஆறு வாரங்களுக்குள் பங்களாவை காலி செய்ய கடந்த செப்டம்பர் 14 அன்று நீதிமன்றம் கூறியிருந்தது. சுப்பிரமணியன் சுவாமியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த ஏப்ரலில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories