

சபரிமலை சன்னிதான வளாகத்தில் உள்ள உணவு நிறுவனங்களில் சோதனையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
சன்னிதானத்தில் உள்ள ஓட்டல்கள், ஜூஸ் கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் வழக்கமான சோதனைகள் மட்டுமின்றி சிறப்பு சோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
ஹோட்டல்கள் மற்றும் பிற உணவகங்களில் உள்ள உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதும், அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பதும்தான் இந்த ஆய்வின் நோக்கம் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.
காலாவதியான உணவுகள் விற்கப்படுகிறதா, சுகாதாரமற்ற சமையல், கழிவுகளை முறையாக அகற்றுதல், காலாவதியான பொருட்களின் பயன்பாடு, ஊழியர்களின் சுகாதார அட்டை போன்றவற்றை ஆய்வுக்குழு மதிப்பீடு செய்கிறது. யாத்ரீகர்களுக்கு சுகாதாரமான நிலையில் நல்ல உணவை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக்கு, சுகாதார ஆய்வாளர் கே.வி. சந்தோஷ் முன்னிலை வகித்தார். சன்னிதானம் மருத்துவ அலுவலர் எஸ். வினீத், இளநிலை சுகாதார ஆய்வாளர்கள் டி. கோபகுமார், எஸ்.கே. பிரதீப், எஸ். ஷைன் மற்றும் பலர் குழுவில் இருந்தனர்.இவர்கள் சன்னதியில் வளாகத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.