
தனியார் உயர் சிறப்பு மருத்துவமனைக்கு இணையான தரத்தில் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தேசிய தரம் மதிப்பிட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தர மதிப்பீடு செய்வதற்காக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் இரு நாட்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு சார்பில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மகப்பேறு சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு லக்சயா என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நான் திட்டத்தின்படி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில்லா மகப்பேறு விகிதத்தை அதிகப்படுத்தவும், பிரசவகால இறப்பு தவிர்க்கவும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து நேஷனல் ஹெல்த் அத்தாரிட்டி சார்பில் தேசிய தர சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இந்த ஆய்வு குறித்து தேசிய தர மதிப்பீட்டு குழுவினர்களான டாக்டர்கள் பரீத் உத்தின், ஜேயெஸ் பட்டேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நிகரான தரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை அறை, மருந்துகள், சிகிச்சை முறைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். இராஜபாளையம் பகுதியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையமாக மருத்துவமனை செயல்படுகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர்ரக சிகிச்சை பெறுகின்றனர்.
ஆய்வு முடிவில் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறந்த மதிப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து மக்களுக்கு தரமான சிகிச்சையை பெரும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆய்வு நடத்தப்படும்,
என்கூறினர்கள்.