வரிகளை செலுத்தாவிட்டால் தாஜ்மஹாலுக்கு சீல் வைக்கப்படும்-ஆக்ரா மாநகராட்சி..

images 2022 12 20T111357.709 - 2026

தாஜ்மஹாலுக்கு சொத்து, தண்ணீர் வரி கட்டாததால் ஆக்ரா மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ரூ. 1.5 லட்சம் சொத்துவரி மற்றும் ரூ.1.9 கோடி குடிநீர் வரியை செலுத்தக் கோரி தாஜ்மஹால் நிர்வாகத்திற்கு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் 2021- 22 மற்றும் 2022-23 நிதியாண்டிக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. வரியை கட்ட கோரி இந்திய தொல்லியல்துறைக்கு மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும், 15 நாட்களில் வரிகளை செலுத்தாவிட்டால் தாஜ்மஹாலுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நினைவு சின்னங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படாது. வணிகரீதியாக பயன்படுத்தாத தண்ணீருக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. தாஜ்மஹால் வளாகத்திற்குள் பசுமையை பராமரிக்க தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் தாஜ்மஹாலுக்கான சொத்து வரி முதல்முறையாக விதிக்கப்பட்டுள்ளது என்றும் இது தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கலாம் இந்திய தொல்லியல் கண்காணிப்பு ஆய்வாளர் ராஜ்குமார் படேல் தெரிவித்திருத்துள்ளார்.

தாஜ்மஹால் வரி தொடர்பான நடவடிக்கைகள் பற்றி எனக்கு தெரியாது வரிகளை கணக்கிடுவதற்க்காக ஆக்ரா முழுவதும் புவியியல் தகவல் அமைப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், அரசு கட்டிடங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அனைத்து வளாகங்களுக்கும் நிலுவையில் உள்ள வரி தொகையை கணக்கெடுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் சரியான செயல்முறையை பின்பற்றுபவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், அவர்களிடமிருந்து பெறப்பட்ட பதிலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் நிகில் டிஃபண்டே கூறியுள்ளார்.

இதனிடையே இந்த நோட்டீஸ் அதிர்ச்சி அளித்துள்ளதாக ஆக்ரா சுற்றுலா நல வாரிய செயலாளர் விஷால் சர்மா தெரிவித்துள்ளார். அதில், “ தாஜ்மஹால் மத்திய அரசின் சொத்து என்றும், உலக பாரம்பரிய சின்னம்.  ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் ஏன் நினைவுச்சின்னத்திற்கு வரி வசூலிப்பு அறிவிப்பை வழங்கியது என்பது புரிந்துகொள்ள முடியவில்லை.  தாஜ்மஹால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக 1920-ல் 102 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், நினைவுச்சின்னத்திற்கு வீட்டுவரி நோட்டீஸ் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என்று அவர் கூறினார். பிரிட்டிஷ் அரசாங்கம் கூட தாஜ்மஹாலை வீட்டு வரியின் கீழ் கொண்டு வந்ததில்லை என்றும், இந்த அறிவிப்பு ஏன் வெளியிடப்பட்டது என்பதை ஆக்ரா மேயர் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories