images 2022 07 27T114715.684 - 2026

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 சித்தப்பாக்கள், தாத்தாவுக்கு ஆயுள் சிறை..

சென்னை
images 2022 07 27T114715.684 - 2026

 சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் 3 சித்தப்பாக்கள், தாத்தாவுக்கு ஆயுள் சிறை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் தம்பதியின் 13 வயது மகள், தனது தாத்தாவின் பராமரிப்பில் படித்து வந்தார்.

கடந்த 2016 முதல் 2017 வரையிலான கால கட்டத்தில் அந்த சிறுமியை அவரது தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்கள், சித்தப்பாக்களின் மகன்கள் இருவர் என மொத்தம் 6 பேர்தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதுதொடர்பான புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீ ஸார் 6 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட சிறுமி யின் தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சித்தப்பாவின் மகன்களில் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.