படித்தது ஏரோனாட்டிக்கல் பாக்குறது வைத்தியம்

images 51 1 - 2026

ஏரோனாட்டிக்கல் படித்துவிட்டு, மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செம்பியன்(35). மருத்துவரான இவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் இணையதளத்தில் தனது லைசென்ஸை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டார்.

images 47 1 - 2026
செம்பியன்

பலமுறை முயற்சி செய்தும் புதுப்பிக்க முடியவில்லை.
இதையடுத்து அவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் (தமிழகம்) அலுவலகத்துக்கு வந்து இதுகுறித்து விசாரித்தார்.

இவரது லைசென்ஸை வேறொருவர் புதுப்பித்திருப்பது தெரியவந்தது.அதிர்ச்சி அடைந்த செம்பியன் இதுகுறித்து உடனடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, அண்ணாநகர் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது, மருத்துவர் செம்பியன் பெயரில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு செம்பியன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செம்பியன்(36) கடந்த 2019-ம் ஆண்டு ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்ட செம்பியன் குறுக்கு வழியில் மருத்துவராகத் திட்டமிட்டு மெடிக்கல் கவுன்சில் இணையதளத்துக்குச் சென்று செம்பியன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களின் பட்டியலை எடுத்துள்ளார். அதில் இவரது பெயரில் பல பேர் இருந்தாலும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தது.

தீவிரமாகத் தேடிய போது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான செம்பியன் என்பவரின் வயது ஒத்துப்போயுள்ளது.
இதையடுத்து உண்மையான மருத்துவர் செம்பியன் புகைப்படம் மற்றும் முகவரியை நீக்கிவிட்டு, இவரது புகைப்படம் மற்றும் முகவரியை மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பிறகு போலி மருத்துவர் செம்பியன் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தரமணியில் மருந்தகத்துடன் கூடிய மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார்.
சிகிச்சை தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டபோதெல்லாம் யூடியூப் உதவியுடன் தகவல்களைத் திரட்டிசிகிச்சை அளித்துள்ளார்.

இவர் பலமருத்துவம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்துள்ளோம். மோசடிக்கு உடந்தையாக வேறு யாரேனும் உள்ளார்களா என விசாரித்து வருகிறோம் என்றனர்.

images 45 1 - 2026
சுதர்சன் குமார்

இந்த நிலையில் போலீசார் எண்ணூர், நேதாஜி நகரைச்சேர்ந்த போலி மருத்துவர் சுதர்சன் குமார் (55). கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இவர் மருத்துவர் படிக்காமல், 30ஆண்டுகளாக கிளினிக் என்ற பெயரில் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories