பிரதமர் என் காலில் விழுந்து ஆசி பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை- பாப்பம்மாள்..

images 45 1 - 2026

பிரதமர் மோடி காலில் விழுந்து ஆசி பெறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி பெருமிதமடைந்துள்ளார்.பிரதமருக்கு சால்வை அணிவித்து பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன் அது நடந்து விட்டதில் எனக்கு பெருமையும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என விவசாயி பாப்பம்மாள் பாட்டி கூறியுள்ளார்.

ஸ்ரீ அன்னம் என்ற பெயரில் சிறுதானியங்கள் மாநாடு நேற்று புதுடெல்லியில் நடை பெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், இலங்கை, சூடான் நாட்டை சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாளும் கலந்து கொண்டார். 107 வயதான அவர், இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியும், பாப்பம்மாளின் காலை தொட்டு வணங்கி, அவரிடம் ஆசி பெற்றார்.

images 46 1 - 2026

பின்னர் பாப்பம்மாளின் கைகளை பற்றி தனது நன்றியையும் தெரிவித்தார். தொடர்ந்து விவசாயி பாப்பம்மாள் பாடியிடம், பிரதமர் மோடி இயற்கை விவசாயம் குறித்து சில நிமிடங்கள் பேசினார்.

பிரதமர் மோடி தனது காலில் விழுந்து ஆசி வாங்கியது குறித்து பாப்பம்மாள் பாட்டி கூறியதாவது: புதுடெல்லியில் நடந்த சிறுதானிய மாநாட்டில் பத்மஸ்ரீ விருது வாங்கியவர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தது. அதன்பேரில் தமிழக அரசு அதிகாரிகளுடன் நானும் டெல்லி சென்று அந்த மாநாட்டில் பங்கேற்றேன்.

எனக்கு நீண்ட நாட்களாகவே பிரதமர் மோடியை வாழ்த்தி அவருக்கு பாராட்டு தெரிவிக்க விரும்பினேன். அந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன். அவரும் பதிலுக்கு எனது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டார். இதனை நான் எதிர்பார்க்க வில்லை. இது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் அவரை சால்வை அணிவித்து பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன் அது நடந்து விட்டதில் எனக்கு பெருமையும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பிரதமர் மோடி, இயற்கை விவசாயியான மூதாட்டி பாப்பம்மாளிடம் காலில் விழுந்து ஆசி வாங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து பலரும் மகிழ்ச்சி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். பாப்பம்மாள் பாட்டி சிறு வயது முதலே விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

குறிப்பாக இயற்கை முறையில் விவசாயத்தை செய்து வருகிறார். கடந்த 30 ஆண்டு களாக இயற்கை விவசாயம் செய்து ஆரோக்கிய மான உணவு பொருட்களை உற்பத்தி செய்து, அதை உண்டு மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். அவரது இயற்கை விவசாயத்தை குறித்து அறிந்த மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரப்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories