கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் மேலும் 7 பேருக்கு தொற்றுநாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்த நிலையில் தற்பொழுது மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 9 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களாக சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாகர்கோவில் நகரில் நேற்று முன்தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குருந்தன் கோடு ராஜக்கமங்கலம் ஒன்றியத்தில் தலா ஒருவரும் தக்கலை ஒன்றியத்தில் இரண்டு பேரும் இன்று பாதிப்பு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட 7 பேரில் 4 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவார்கள். நேற்று முன்தினம் 7 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றும் 7 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்.
பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.