
சோழவந்தான்: ரோடா இது, என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்தார் மதுரை ஆட்சியர் சங்கீதா.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி முதல் குலசேகரன்கோட்டை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க நபார்டு வங்கி உதவியுடன் ரூ.ஒரு கோடியே 10 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாம்.
அப்போது, அங்கு ஆய்வுப்பணிக்காக வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தனது காரை நிறுத்தி சாலையை ஆய்வு செய்து அதிகாரிகளை கண்டித்தார்.
சாலை சரியில்லை, எனது வாகனம் வந்தாலே சாலை சேதமாகிவிடும். இது எப்படி நல்லா இருக்கும் என, அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கண்டித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பொதுவாக சாலை அமைக்கும் பணியை, நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பணித்துறை கோட்டம் பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். சாலை தரமாக உள்ளதா, என உதவிப் பொறியாளர் சான்று அளிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஆய்வின்போது சாலைகளை, தரமாக ஒப்பந்ததாரர்கள் அமைக்கிறார்களா, என அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தினார்.