
முனைவர் கு.வை.பா.,வின் வானிலை அறிக்கை, 09.06.2023, 1315 மணி அளவில்.
அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் அதிதீவிரப் புயல் “பிபோர்ஜாய்” கோவாவிற்கு மேற்கே சுமார் 800 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்தால் இந்தியப் பகுதிகளில் மழை குறையும்.
அதே சமயம் கிழக்கு நோக்கி நகர்ந்தால் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும். ஆயினும் கணினி வழிகாட்டல்கள் இன்னமும் இந்த “பிபோர்ஜாய்” புயலின் பாதையை தெளிவாகக் கணித்துக் காட்ட முடியவில்லை.
இச்சமயத்தில் வங்கக் கடலில் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலிவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தோன்றியுள்ளது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய இது உதவும்.
கேரளத்தில் நேற்றும் இன்றும் நல்ல மழை பெய்திருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியிl 08.06.2023 காலை 0830 மணி முதல் 09.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) 11;
RSCL-2 கஞ்சனூர், RSCL-2 நெமூர் (விழுப்புரம்), ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 5;
விழுப்புரம் (விழுப்புரம்) 4;
Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 3;
RSCL-3 செம்மேடு, RSCL-3 ஆனந்தபுரம், RSCL-2 கேதார் (விழுப்புரம்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), சின்னக்கலாறு (கோவை), வாலாஜா (இராணிப்பேட்டை), குன்னூர் (நீலகிரி) தலா 2;
பாரூர், ஊத்தங்கரை, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), குடியாத்தம் (வேலூர்), கலவாய் பொதுப்பணித்துறை, ஆற்காடு (இராணிப்பேட்டை), போளூர், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-2 சூரப்பட்டு, RSCL வல்லம், RSCL-3 வளத்தி, RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), கொடிவேரி (ஈரோடு) தலா 1.