ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
அதிக வருவாய் ஈட்டும் மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் வழித்தடமான கொல்லம் திருநெல்வேலி,கொல்லம் செங்கோட்டை மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் கொல்லத் தில் இருந்து இயங்கிய கொல்லம்-திருநெல்வேலி, கொல்லம் -கோவை, கொல்லம் -சென்னை மெயில் செங்கோட்டை ராமேஸ்வரம் ரயில்களை மீண்டும் இயக்க மதுரை கோட்ட ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்ற 2023-2024 நிதியாண்டிற்காண ரயில்வே வருவாய் தரவினை இந்திய ரயில்வேயானது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள கோட்டவாரியான வருவாய் விவரத்தில் மதுரை கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மதுரை கோட்டத்தில் மதுரை ரயில் நிலையம் முதலிடத்தையும், திருநெல்வேலி ரயில்நிலையம் இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் ரயில்நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
விருதுநகர் ரெயில்நிலையத்தினை பொறுத்த வரை ₹25,17,78,990 வருமானம் ஈட்டி ஆறாம் இடத்தில் உள்ளது.
மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்திலும், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. தென்காசி ரெயில் நிலையம் ரூ.21.60 கோடி வருமானத்துடன் 9-வது இடத்தில் உள்ளது.
இதில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ், ஈரோடு எக்ஸ்பிரஸ், நெல்லை-செங்கோட்டை 4 ஜோடி பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் ஆகியவற்றால் தென்காசி ரெயில் நிலையத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.
மதுரை கோட்டத்தில் மொத்தம் 132 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் நூற்றாண்டு பழமை கொண்ட நெல்லை-தென்காசி வழித்தடம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை செங்கோட்டையில் சென்னைக்கு பகல் நேர தினசரி ரெயில் இல்லை.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்க அறிவிக்கப்பட்டு ரயில்வே கால அட்டவணையில் இடம்பெற்ற செங்கோட்டை தாம்பரம் செங்கோட்டை தினசரி பகல் நேர ரயில் சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.
கொல்லம் திருநெல்வேலி,கொல்லம் செங்கோட்டை மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் கொல்லத் தில் இருந்து இயங்கிய கொல்லம்-திருநெல்வேலி, கொல்லம் -கோவை, கொல்லம் -சென்னை மெயில்ரயில்கள் தற்போது அகல ரயில் பாதையாக போடப்பட்டபின் மீண்டும் இயங்கவில்லை.
மேலும் தென்காசி மக்களவைத் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெங்களூரு கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு ரெயில் வசதி கிடையாது.
எனினும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் மதுரை கோட்டத்தின் வருமானத்தில் முதல் 50 இடத்திற்குள் வந்துள்ள நிலையில் இந்த வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை வலுத்துள்ளது.
தற்போது செங்கோட்டை-தாம்பரம், செங்கோட்டை சென்னை சிலம்பு அதிவிரைவு ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே ரெயில் இயக்கப்படுகிறது. இந்த இரு ரயில்களை தினமும் இயக்க வேண்டும்.
மேலும் மும்பை, மங்களூரு ஆகிய ஊர்களுக்கு தென்காசி ராஜபாளையம் வழியாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பெங்களூரு சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.
திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் அதிகரித்து வருவதால் திருவனந்தபுரம் செல்வதற்கு திருவனந்தபுரம்-புனலூர் கன்னியாகுமரி புனலூர் ரயில்கள் செங்கோட்டை திருநெல்வேலி வரை நேரடி ரெயில் சேவையாக இயக்க வேண்டும் – என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.