
காவிரி பிரச்னைக்குக் காரணம் அன்றும் இன்றும் திமுக.,தான் என்று கூறி, 40 வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் வந்த செய்தியையும் தற்போதைய திமுக.,வின் செயல்பாடுகளையும் சொல்லி இணையத்தில் செய்தி வைரலாகப் பரவுகிறது.
தற்போதும், கர்நாடக காங்கிரஸ் அரசையோ, அம்மாநில முதல்வர் சித்தராமையாவையோ கேள்வி எதுவும் கேட்காமல், நெருக்கடி எதுவும் கொடுக்காமல், போராட்டம் எதுவும் செய்யாமல், பல தளங்களில் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் தமிழக அரசையும், வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸால் நெருக்கப்படும் மத்திய அரசையும் மட்டுமே குறிவைத்து திமுக.,வினர் இயங்குவது, காவிரி நிலைப்பாட்டில் ஒரு நாடகம்தான் என்கிறார்கள்!



